Cyclone Nivar | மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்லவேண்டும்..நிவாரண முகாம்களில் உணவு, மருந்துகள் தயார்நிலை - அமைச்சர் உதயகுமார்..
Cyclone Nivar | மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்லவேண்டும்..நிவாரண முகாம்களில் உணவு, மருந்துகள் தயார்நிலை - அமைச்சர் உதயகுமார்..
அமைச்சர் ஆர்.பி உதயகுமார்
Cyclone Nivar | மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல வேண்டும் என்றும் அனைத்து மீட்பு குழுகளும் தயார் நிலையில் உள்ளன என்று அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
சென்னை எழிலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், 145 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்திற்கு வர வேண்டும் என கேட்டு கொண்டார். மேலும் வருவாய் துறை, காவல்துறை, தேசிய பேரிடர் மீட்பு படையினர், கடலோர காவல்படை என அனைத்து மீட்பு குழுகளும் தயார் நிலையில் இருப்பதாக கூறினார்.
மேலும் கடலோர காவல்படை சுமார் 100 பேருடன் ஐந்து குழுக்களாக சென்னையில் தயார் நிலையில் உள்ளது. மண்டபம் பகுதியில் இரண்டு குழுக்கள் உள்ளன. இந்திய ராணுவம் சார்பில் ஒரு குழுவிற்கு 10 வீரர்கள் என 8 குழுக்கள் மற்றும் 2 படகுகளுடன் சென்னையில் தயார் நிலையில் உள்ளனர்.
அதே போல ஒரு குழுவிற்கு 10 வீரர்கள் வீதம் ஆறு குழுக்கள் ஒரு உயிர்காப்பு படகுகளுடன் திருச்சியில் இந்திய ராணுவ வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். நிவர் புயல் கரையை கடந்த உடன் நிவாரணப் பணிகளுக்காக 8 ஹெலிகாப்டர் தயார் நிலையில் உள்ளன. அதில் பெங்களூர் 2, சூலூர் 4, தாம்பரம் 2 ஹெலிகாப்டர்கள் தயார் நிலையில் உள்ளன.
இந்திய கப்பற்படை சார்பில் சென்னையில் ஒரு குழுவில் 4 வீரர்கள் என மொத்தம் ஐந்து குழுக்கள் மற்றும் 1 மருத்துவ குழுவும் நாகப்பட்டினத்தில் ஒரு குழுவும் ராமேஸ்வரத்தில் ஒரு குழுவும் வெள்ள மீட்பு பணிகளுக்காக தயார் நிலையில் உள்ளனர்.
மேலும் 13 லட்சம் மக்கள் தங்கும் அளவிற்கு நிவாரண முகாம் உள்ளது. அங்கே உணவு மற்றும் மருந்து பொருட்கள் தயாராக உள்ளது என தெரிவித்தார்.
Published by:Vaijayanthi S
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.