பட்டு புடவை வாங்க குவியும் மக்கள்: சிவகங்கை கைத்தறி பட்டு உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பெரும்பச்சேரி கைத்தறி பட்டு புடவைகளுக்கு, மவுசு அதிகரித்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கைத்தறி பட்டு புடவைகளை வாங்க, பொது மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

  • Share this:
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகாவிற்கு உட்பட்ட பெரும்பச்சேரி கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாரம்பரியமாக நெசவு தொழில் செய்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தின் கடைகோடியில் உள்ள காந்திஜி காலனி, மகாலட்சுமி காலனி உள்ளிட்ட பகுதிகளில் எவ்வித விளம்பரமுமின்றி 100 விழுக்காடு கைத்தறி பட்டு உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. பட்டு எடுக்க காஞ்சிபுரம், போச்சம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றவர்கள் தற்போது பெரும்பச்சேரி நோக்கி படையெடுத்து வருகின்றனர். நெல்லை, தென்காசி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களிலும் இருந்து ஆர்டர்கள் குவிந்து வருவதாக நெசவாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

1,500 முதல் ஒரு லட்சம் ரூபாய் வரையிலான கைத்தறி பட்டு புடவைகள் ஏராளமான டிசைன்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இயந்திரங்கள் உதவியின்றி நுணுக்கமான வேலைப்பாடுகளை கொண்டு கைகளால் நெய்யப்படும் சேலைகள் பொதுமக்களை கவர்ந்து வருகின்றன.

வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அவர்கள் கேட்கும் டிசைன்களையும் மூன்றே நாட்களில் நெசவு செய்து கொடுப்பதால் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு ஆர்டர்கள் குவிந்து வருகிறது. விலை குறைவாகவும், மனதிற்கு நிறைவாகவும் இருப்பதால் பட்டு வாங்க தூரத்தை பொருட்படுத்தாமல் வந்திருப்பதாக வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.


மேலும் படிக்க...4 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்துசென்று, சேர்ந்துவாழ வராததால் மனைவியை வெட்டிய நபர் கைது.. ( வீடியோ)



 கொரோனாவால் முடங்கிக்கிடந்த கைத்தறி பட்டுத்தொழில் தீபாவளி விற்பனையில் ஒளி ஏற்றும் என்ற நம்பிக்கையுடன் நெசவாளர்கள் தங்களது பணிகளை தொடர்ந்து வருகின்றனர்.
First published: October 27, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading