Home /News /tamil-nadu /

100 நாட்கள் வேலைக்கு சென்றவர்கள் மீது தேனீ கொட்டியதால் பரபரப்பு - 30 பேர் காயம்

100 நாட்கள் வேலைக்கு சென்றவர்கள் மீது தேனீ கொட்டியதால் பரபரப்பு - 30 பேர் காயம்

மருத்துவமனை

மருத்துவமனை

Thoothukudi District : கருவேல மரத்தினை அகற்றி கொண்டிருக்கும் போது அதிலிருந்த விஷத் தேனீ கலைந்து பெண்கள், ஆண்கள் மீது கை, கால், முகம்,தலை போன்றவற்றில் கொட்டியது. இதில் 34 பேருக்கு வீக்கத்துடன் காயம் ஏற்பட்டது.

கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலை பகுதியில் 100 நாட்கள் வேலைக்கு சென்றவர்கள் மீது தேனீ கொட்டியதால் 30 பேர் காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கழுகுமலை அடுத்துள்ள கிராமம் வெங்கடேசபுரம். இந்த பகுதியைச் சேர்ந்த பெண்கள் ஆண்கள் என  84 பேர் அப்பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊராக 100 நாட்கள் வேலைக்கு சென்றுள்ளனர். அப்பகுதியில் ஓடையில் தண்ணீர் செல்வதற்கு இடையூறாக இருந்த சீமை கருவேலை மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு இருந்ததாக தெரிகிறது.

ALSO READ |  மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் : தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது
 அப்போது ஒரு கருவேல மரத்தினை அகற்றி கொண்டிருக்கும் போது அதிலிருந்த விஷத் தேனீ கலைந்து பெண்கள், ஆண்கள் மீது கை, கால், முகம்,தலை போன்றவற்றில் கொட்டியது. இதில் 34 பேருக்கு வீக்கத்துடன் காயம் ஏற்பட்டது. 30 பேர் கோவில்பட்டி அரசு மருத்துவமனையிலும் மீதமுள்ள நான்கு பேர் கழுகுமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சைக்காககருவேல மரத்தினை அகற்றி கொண்டிருக்கும் போது அதிலிருந்த விஷத் தேனீ கலைந்து பெண்கள், ஆண்கள் மீது கை, கால், முகம்,தலை போன்றவற்றில் கொட்டியது. இதில் 34 பேருக்கு வீக்கத்துடன் காயம் ஏற்பட்டது. தேனீ கொட்டியதால் 30 பேர் காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Thoothukudi

அடுத்த செய்தி