நாளை முழு ஊரடங்கு: சென்னையில் மீன் வாங்க குவிந்த பொதுமக்கள்

கொரோனா பரவலைத் தடுக்க நாளை தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் நிலையில் இன்று சென்னை பட்டினப்பாக்கத்தில் மீன் வாங்குவதற்கு அசைவ பிரியர்களின் கூட்டம் அலைமோதியது. 

நாளை முழு ஊரடங்கு: சென்னையில் மீன் வாங்க குவிந்த பொதுமக்கள்
மீன் வாங்க குவிந்த மக்கள்
  • Share this:
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாளை தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும். மருந்தகங்களைத் தவிர அனைத்து அத்தியாவசிய கடைகள் உள்பட அனைத்தும் மூடப்பட்டிருக்கும். சென்னை பட்டினப்பாக்கத்தை பொறுத்தவரையில் இன்று மதியம் முதலே மீன் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. விலை அதிகமாக இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் மீன்களை வாங்கி செல்கின்றனர். இதனால் அந்த பகுதிகள் வாகனங்களை நிறுத்த இடமில்லாமல் கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

கூட்டம் அதிகமாக இருப்பதால் கொரோனா பயம் இருப்பதாகவும் ஆனாலும் வேறு வழியில்லை மீன் வாங்கியே தீர வேண்டும் என்கின்றனர் இல்லத்தரசிகள். கூட்டத்தைப் பார்த்து பயந்தால் வயிற்றுப் பிழைப்புக்கு வழியில்லை. எனவே வியாபாரம் செய்வதாக கூறுகின்றனர் மீன் விற்கும் பெண்கள்.

வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதால் நோயைக் காட்டிலும் மற்ற வியாதிகள் வந்துவிடும் என்பதும் அவர்களின் கருத்தாக உள்ளது.


கொரோனா நோயில் இருந்து தற்காத்துக்கொள்ள எதிர்ப்புசக்தி அவசியம் என்கின்றனர் மருத்துவர்கள். எனவே மீன் சாப்பிட்டால் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் என்பதற்காக கூட்டத்தை பற்றி கவலைப்படாமல் மீன் வாங்க வந்துள்ளதாக சிலர் தெரிவிக்கின்றனர்.

கடந்த வாரத்தைக் காட்டிலும் இந்த வாரம் மீன்களின் விலை அதிக அளவு உள்ளது. ஆனாலும் வேறு வழி இல்லை குழந்தைகளுக்கு மீன் தேவை என்பதால் மீன் வாங்க வந்துள்ளதாக கூறுகிறார்கள் பெண்கள். மொத்தத்தில் கொரோனா குறித்த எந்த பயமும் இல்லாமல் மீன் வாங்குவதில் மும்முரமாக இருக்கிறார்கள் சென்னைவாசிகள்.
First published: July 18, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading