நாளை முதல் முழு ஊரடங்கு - டாஸ்மாக் கடைகளில் குவிந்த குடிமகன்கள்

மது வாங்க அலைமோதும் கூட்டம்

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் இன்று இரவு 12 மணி முதல் 30ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதால் மதுபானக் கடைகளில் குவிந்துள்ளனர் குடிமகன்கள்.

 • Share this:
  கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவால் சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் மதுபான கடைகள் திறக்கப்பட்டுள்ளன. அதன்படி சென்னை புறநகர்ப் பகுதிகளில் தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கம் பகுதியில் மூன்று மது கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

  இந்த கடைகளில் சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிமகன்கள் மதுபானங்கள் வாங்கி செல்கின்றனர்.

   

  இந்நிலையில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இன்று இரவு 12 மணி முதல் 30-ம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட உள்ளது.

  இதனால், மேற்கண்ட மாவட்டங்களில் மதுபானக் கடைகள் மூடப்படும் என அஞ்சிய குடிமகன்கள், முன்னதாகவே வாங்கி வைத்துக்கொள்ள மதுபானக் கடையில் குடிமகன்கள் குவிந்து வருகின்றனர்.

  சில கடைகளில் மூட்டை மூட்டையாக சரக்குகளை வாங்கிக் கொண்டு வாகனங்களில் ஏற்றிக் கொண்டு செல்கின்றனர். கூட்டத்தை பயன்படுத்தி மதுபானங்கள், கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினர்.

  Also read... சீர்காழி அருகே காகங்கள் & நாய்கள் அடுத்தடுத்து உயிரிழப்பு - விஷம் வைத்தவர் கைது

  அது மட்டுமில்லாமல் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் கூட்டமாக குடிமகன்கள் கடைகளின் முன்னர் குவிந்து வருகின்றனர்.
  Published by:Vinothini Aandisamy
  First published: