சென்னை காசிமேடு மீன் விற்பனை கூடத்தில் இன்று ஏராளமானோர் மீன்களை வாங்குவதற்காக கூடினர். ஞாயிற்றுக்கிழமை என்றால் திருவிழா போல் காட்சியளிக்கும் காசிமேடு மீன்பிடி சந்தைக்கு பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து மீன்களை வாங்கிச் சென்றனர்.
காசிமேட்டில் மீன்பிடி தடைகாலம் அமலில் இருக்கும் நிலையில் பெரிய விசைப்படகுகள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லவில்லை சிறிய வகை பைபர் படகுகள் மற்றும் கடலோர பகுதிகளில் மீன்களைப் பிடித்துக் கொண்டு வரும் நிலையில் மீன் வரத்து குறைவாக இருப்பதனாலும் மீன்களின் விலை ஏற்றத்துடன் காணப்பட்டது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு வஞ்சரம் மீன் ஒரு கிலோ 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இன்று ஒரு கிலோ 1200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இறால் ஒரு கிலோ 450 முதல் 600 வரைக்கும், பாறை வகை மீன்கள் ஒரு கிலோ 600 ரூபாய் முதல் 800 ரூபாய் வரைக்கும், நண்டு ஒரு கிலோ 600 ரூபாய் வரைக்கும் சீலா வகை மீன்கள் 750 ரூபாய்க்கும் சூரை மீன்கள் ஒரு மீன் 400 ரூபாய் முதல் 600 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மீன் வரத்து குறைவாக இருந்தபோதிலும் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீன் வாங்குவதற்காக ஏராளமான பொதுமக்கள் காசிமேடு மீன் மார்க்கெட்டில் காலையிலேயே குவிந்தனர். இதனால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.
செய்தியாளர்: அசோக் குமார் இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.