• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • பாஸ் போடுவாங்களா.. இல்லையா.. விசாரணையை பார்க்க நீதிமன்ற வீடியோ கான்பரன்சிங்கில் இணைந்த அரியர் மாணவர்கள்... ஸ்தம்பித்தது வழக்குகள்!

பாஸ் போடுவாங்களா.. இல்லையா.. விசாரணையை பார்க்க நீதிமன்ற வீடியோ கான்பரன்சிங்கில் இணைந்த அரியர் மாணவர்கள்... ஸ்தம்பித்தது வழக்குகள்!

மாதிரி படம்

மாதிரி படம்

மொத்தம் 350 பேர் வரை லாக் இன் செய்திருந்ததுடன், வீடுகளில் தொலைக்காட்சி ஒலி, குழந்தைகள் சப்தம் உள்ளிட்ட இடையூறுகள் ஏற்பட்டன.

  • News18
  • Last Updated :
  • Share this:
அரியர் தேர்வுகள் ரத்தை எதிர்த்த வழக்கு விசாரணையை கவனிக்க நூற்றுக்கணக்கானவர்கள் வீடியோ கான்பரன்சிங்கில் நுழைந்ததால் வழக்குகள் விசாரணை பாதிக்கப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அடங்கிய அமர்வு, இன்று காலை வழக்குகளை விசாரிக்க துவங்கினர். அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்த வழக்கு, இன்று 26 வது வழக்காக விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

இதனால் நூற்றுக்கணக்கான மாணவர்கள், ஆன் லைன் விசாரணையில் லாக் இன் செய்தனர். மொத்தம் 350 பேர் வரை லாக் இன் செய்திருந்ததுடன், வீடுகளில் தொலைக்காட்சி ஒலி, குழந்தைகள் சப்தம் உள்ளிட்ட இடையூறுகள் ஏற்பட்டன.

Also read... பள்ளிகள், கல்லூரிகளில் பின்பற்றப்படவேண்டிய அடிப்படை சுகாதார நடைமுறைகள்..



இதனால் வழக்குகள் விசாரணையை நீதிபதிகள் நிறுத்தி விட்டனர். வழக்குகள் விசாரணை தடைபட்டதால், தேவையில்லாமல் லாக் இன் செய்தவர்களை வெளியேறும்படி, சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள் கேட்டுக் கொண்டனர். இருப்பினும் எவரும் வெளியேறவில்லை.

கடந்த விசாரணைகளின் போதும் ஏராளமான மாணவர்கள், விசாரணையில் பங்கேற்று, இடையூறு ஏற்படுத்தினர். அப்போது, மாணவர்கள் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என நீதிபதிகள் எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: