குழந்தைகள் ஆபாச படங்களை பார்த்தாலே கைது செய்யலாம்..! - நிபுணர்கள் எச்சரிக்கை

போக்சோ மற்றும் ஐ.டி. சட்டத்தின் கீழ் கைது செய்யலாம்

குழந்தைகள் ஆபாச படங்களை பார்த்தாலே கைது செய்யலாம்..! - நிபுணர்கள் எச்சரிக்கை
மாதிரிப் படம்
  • News18
  • Last Updated: December 13, 2019, 10:36 AM IST
  • Share this:
குழந்தைகள் ஆபாச படங்களை பகிர்வது மட்டுமல்ல, பார்த்தாலே கைது செய்யப்படலாம் என்கிறார் சைபர் கிரைம் நிபுணர் கார்த்திகேயன்.

குழந்தைகள் ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்ததாக திருச்சியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  இந்நிலையில் குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பவர்களையும் கைது செய்யலாம் என்றும்  சைபர் கிரைம் நிபுணர் கார்த்திகேயன் கூறுகிறார். " சிலர் ஆபாச படங்களை பதிவேற்றினால்தான் தவறு என்று வதந்திகளை பரப்பிக் கொண்டிருக்கின்றனர். அது முற்றிலும் தவறு. ஆபாச வீடியோக்களை பார்த்தாலும் அவர்களை கைது செய்ய இரண்டு சட்டங்கள் உள்ளன. போக்சோ சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் ஆகிய இரு சட்டங்களுக்குக் கீழ் கைது செய்யலாம்”  என்று கூறுகிறார்.

மேலும் இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்ததில் ”இந்த கைது நடவடிக்கை ஒருபுறம் நம்பிக்கையை கொடுத்தாலும், மறுபுறம் இது மட்டுமே தீர்வாகாது என்று கூறப்படுகிறது. அதாவது, தண்டனைக்கு இணையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டால் மட்டுமே நிரந்தர தீர்வு கிடைக்கும்” என குழந்தைகள் நல ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


First published: December 13, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்