சென்னை மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட தண்ணீர் பஞ்சம்!

மனிதனின் அன்றாட வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கும் விதத்தில் தலைநகரில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

news18
Updated: June 14, 2019, 3:18 PM IST
சென்னை மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட தண்ணீர் பஞ்சம்!
தண்ணீருக்காக பல மணி நேரம் காத்திருப்பு
news18
Updated: June 14, 2019, 3:18 PM IST
தலைநகர் சென்னையில் முன்எப்போதும் இல்லாத அளவுக்கு அனைத்துப் பகுதிகளிலும் தண்ணீருக்காக மக்கள் குடங்களுடன் காத்துக் கிடக்கின்றனர்.

மனிதன் அன்றாடம் உயிர் வாழ முக்கியத் தேவை தண்ணீர். தற்போது சென்னையில் நிலவி வரும் கடுமையான தண்ணீர் பஞ்சம் பொதுமக்களின் தினசரி வாழ்கையையே முடக்கிப்போட்டுள்ளது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீர் அதளபாதாளத்திற்குச் சென்றுவிட்டதால், லாரித் தண்ணீரை மட்டுமே நம்பி இருக்கிறார்கள் சென்னைவாசிகள்.

ஆனாலும் ஒருநாளைக்கான தண்ணீர் தேவையில் வெறும் இருபது விழுக்காடு மட்டுமே பூர்த்தியாகிறது. இதனால் தங்களின் அன்றாட தேவைகளையே மக்கள் குறைத்துக் கொள்ளும் அவலம் ஏற்பட்டுள்ளது. வாரம் மூவாயிரம் ரூபாய் கொடுத்து தண்ணீர் வாங்குகிறார்கள் சிலர்.

பள்ளிகளில் போதிய தண்ணீர் இல்லாததால் பெரும்பாலான பள்ளிகள் மதியம் வரை மட்டுமே நடைபெறுகிறது. மேலும் மாணவர்கள் கழிப்பறையில் பயன்படுத்துவதற்காக கூடுதலாக ஒரு பாட்டில் தண்ணீர் கொடுத்து அனுப்புமாறு அறிவுறுத்தும் பள்ளிகளும் உள்ளன.

அலுவலகங்களில் ஊழியர்களின் பயன்பாட்டிற்கு தேவையான தண்ணீரை கொடுக்கமுடியாததால் Work From Home என்ற நடைமுறையை ஐடி நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியுள்ளன.

தனியாக வீடு எடுத்து தங்கியுள்ள பேச்சலர்கள் நிலை இன்னும் மோசம். பாத்திரம் கழுவக் கூட தண்ணீர் கிடைக்காததால் சமைப்பதே இல்லை என்றும், Snacks மட்டும்தான் தங்களது உணவு என்றும் கூறுகிறார்கள்.

இதேபோல் சிறிய அளவில் உணவகம் நடத்தி வரும் ஷில்பா, தண்ணீர் தட்டுப்பாட்டால் சமைக்கவும், பிற பயன்பாட்டிற்கும் விலை கொடுத்து கேன் தண்ணீர் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்
Loading...
தண்ணீர் தட்டுப்பாட்டால் மனிதன் கழிவறையைக் கூடபயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய பேருந்து நிலையமான கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கழிவறைகளில் தண்ணீர் இல்லை.

கழிவறை குழாய்களில் வெறும் காற்று மட்டுமே வருகிறது என்கிறார்கள் பயணிகள். இதனால் ஆத்திர அவசரத்திற்கு கழிப்பறைக்கு செல்பவர்கள் விலை கொடுத்து தண்ணீர் பாட்டில் வாங்கிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இப்படி மனிதனின் அன்றாட வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கும் விதத்தில் தலைநகரில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.

Also see...

First published: June 14, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...