சென்னையில் ரெம்டெசிவிர் மருந்து வாங்க இரவு பகலாக வரிசையில் நிற்கும் மக்கள்

மருந்து வாங்க இரவு பகலாக வரிசையில் நிற்கும் மக்கள்

இன்று காலை முதல் மருந்து விநியோகம் தொடங்கிய போது நேற்று கொடுத்த தகவலின்படி மக்கள் வரிசையில் நின்று மருந்து வாங்கிச் செல்கின்றனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கொரோனாவிலிருந்து மக்களை குணப்படுத்தும் ரெம்டெசிவிர் மருந்துகளுக்கு நாடு முழுவதும் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் சென்னையில் மருந்து வாங்க இரவு பகலாக மக்கள் வரிசையில் நின்று வருகிறார்கள்.

சார்ஸ் மாதிரியான வைரஸ் தொற்றை குணப்படுத்த Remdesivir மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. கொரோனா வைரஸ்க்கும்  இந்த மருந்துகள் செயல்படுவதாக மத்திய அரசு பரிந்துரைத்து மருத்துவர்கள் அந்த மருந்தை நோயாளிகளுக்கு அளித்து வருகிறார்கள். தற்போது இரண்டாம் அலை அதிகரித்து உள்ளதால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அதிகரித்து வருவதால் ரெம்டெசிவிர் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

கள்ளச்சந்தையில் மருந்துகள் 15,000 முதல் 30,000 வரை விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நிலையில் தமிழக அரசு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருந்துகளின் உரிய விலையான 1545 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறது.

இந்த மருந்துகளை வாங்குவதற்கு திருவள்ளூர், காஞ்சிபுரம் மட்டுமல்லாமல் கடலூர் மாவட்டத்தில் இருந்தும் சென்னைக்கு பலர் வந்து வரிசையில் காத்து இருக்கிறார்கள்.

நேற்று காலை மருந்து வினியோகம் தொடங்கப்பட்ட நிலையில் குறைவான மருந்துகளை மட்டுமே நேற்று இருந்ததால் மீதமிருந்த மக்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டு அனுப்பப்பட்டது.

இந்தநிலையில் இன்று காலை முதல் மருந்து விநியோகம் தொடங்கிய போது நேற்று கொடுத்த தகவலின்படி மக்கள் வரிசையில் நின்று மருந்து வாங்கிச் செல்கின்றனர்.

Also read... கோவிட் 19 - மருத்துவமனை இடவசதி, ஆக்சிஜன் உதவி எளிதாக கிடைக்க சிறந்த வழி இதோ

இன்று புதிதாக மருந்து வாங்க வந்தவர்கள் அதிகாலை 3 மணி முதலே காத்திருப்பதாக நம்மிடம் தெரிவித்திருக்கிறார்கள். ரெம்டெசிவிர் மருந்துகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதால் நோயாளிகளின் ஆதார் அட்டை மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு ஆகியவற்றை கொண்டு வருபவர்களுக்கு மட்டுமே அதிகபட்சமாக ஆறு டோஸ்கள் வரை வழங்கப்படுகின்றன.

மருந்து வாங்க வந்த அவர்களின் உறவினர்கள் நண்பர்கள் என பலர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருப்பதால் கடும் வெயிலிலும் உணவு நீர் இல்லாமல் மக்கள் மருந்து வாங்கிச் செல்கின்றனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: