ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பணமதிப்பிழப்பு.. திமுக பகிரங்கமா மன்னிப்பு கேட்கணும் - அண்ணாமலை பரபர பேச்சு

பணமதிப்பிழப்பு.. திமுக பகிரங்கமா மன்னிப்பு கேட்கணும் - அண்ணாமலை பரபர பேச்சு

அண்ணாமலை

அண்ணாமலை

திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Dharmapuri, India

காவிரி உபரி நீரை தருமபுரி மாவட்ட ஏரிகளுக்கு நிரப்ப நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பாஜக சார்பில் தருமபுரியில் நேற்று பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், கலந்து கொண்டு பேசிய அண்ணாமலை, தருமபுரியில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட இரண்டாவது திட்டம் 4 ஆயிரத்து 500 கோடி ரூபாயில் நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதை சுட்டிக்காட்டினார்.

ஆனால், இந்த திட்டத்தையும் முறையாக செயல்படுத்த மாட்டார்கள் என்று சாடினார். மேலும், பண மதிப்பிழப்பு விவகாரத்தில் பொதுமக்கள் பாதிக்கப்படவில்லை என்றும், இது குறித்து தவறாக பிரசாரம் செய்த திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் கூறினார். எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுகவால் தனித்து போட்டியிட முடியுமா என்றும் அண்ணாமலை சவால் விடுத்தார்.

தொடர்ந்து பேசிய அண்ணாமலை, தங்களது கொள்கையுடன் ஒத்துப் போகும் கட்சிகளுடன் தான் பாஜக கூட்டணி வைக்கும் என்றும் தெரிவித்தார்.

First published:

Tags: Annamalai, DMK