சென்னையில் பரவலாக மழை : வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி

மழை

சென்னையில் ஆங்காங்கே பரவலாக, மிதமான மழை பெய்து வருகின்றது. இதனால் வெப்பம் தணிந்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 • Share this:
  சென்னையில் ஆங்காங்கே பரவலாக, மிதமான மழை பெய்து வருகின்றது. வெப்பம் தணிந்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

  சென்னையில் கடந்த சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மதிய வேளையில் வெளியே செல்ல முடியாமல் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாயினர். மாலை 4 மணிவரையில் வெளியே செல்வதைத் தவிர்க்குமாறு வானிலை ஆய்வுமையம் எச்சரித்திருந்தது.

  இந்நிலையில், கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் சற்றே குறைந்து வந்தது. அதனைத் தொடர்ந்து இன்று நகரின் பல்வேறு பகுதிகளில் பரவலாக லேசான மழை பெய்து வருகின்றது. அதன்படி, அண்ணாநகர், போரூர், பூந்தமல்லி, வளசரவாக்கம், வடபழனி, மதுரவாயல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகின்றது.

  இந்த மழையால் வெப்பம் தணிந்து வருகின்றது. மழையைப் பார்த்து மகிழ்ச்சியடைந்த பலர் மழை பெய்யும் காட்சிகளை படம் எடுத்து தங்களின் சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டு மகிழ்ச்சியை பரிமாறி வருகின்றனர். தமிழ்ப் புத்தாண்டு மகிழ்ச்சியுடன், இந்த மழை காரணமாக சென்னை மக்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

  Must Read :  இந்தியாவில் ஒரேநாளில் 1.84 லட்சம் பேருக்கு கொரோனா : 1000-ஐ தாண்டிய உயிரிழப்பு

   

  இதேபோல, தமிழகத்தின் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகின்றது. இந்நிலையில், அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தின் பல மாவட்டங்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
  Published by:Suresh V
  First published: