கலைஞர் நூலகத்துக்கு புத்தகங்கள் பரிசளிப்போம் - எழுத்தாளருக்கு பதிலளித்த பென்னிகுவிக் பேரன், பேத்தி

பென்னிகுயிக் பேரன், பேத்தி

கலைஞர் நூலகம் கட்டுவது தொடர்பாக எழும் சர்ச்சை தேவையற்றது என்று பென்னிகுவிக்கின் பேரன், பேத்தி விளக்கம் அளித்துள்ளனர்.

  • Share this:
    மதுரையில் 99 கோடி ரூபாய் மதிப்பில் 2 லட்சம் சதுர அடி பரப்பளவில் 8 மாடி கட்டிடமாக கலைஞர் நினைவு நூலகம் அமைக்க மதுரை - நத்தம் சாலையில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடம் தேர்வு செய்யப்பட்டது. நூலகம் கட்டுவதற்காக மதுரையில் மொத்தம் 7 இடங்களில் அமைச்சர்கள், அதிகாரிகள் ஆய்வு செய்து, இறுதியாக பொதுப்பணித்துறை வசம் உள்ள இந்த இடம் நூலகம் கட்ட ஏதுவாக இருக்கும் என கருதி இதனை இறுதி செய்திருந்தனர். அந்த இடத்தில் உள்ள பொதுப்பணித்துறை கட்டிடத்தில், பெரியாறு அணையை கட்டிய கர்னல் பென்னி குக் வாழ்ந்ததாக கூறி நூலகம் கட்டுவதற்கு பெரியாறு - வைகை பாசன ஆயக்கட்டு விவசாய அமைப்பு எதிர்ப்பு தெரிவித்தது.

    கர்னல் பென்னிகுக் 15.01.1841-ல் பிறந்து, 09.03.1911-ல் இறந்துள்ளதாகவும், அதன் பின்னர் 1912-ல் பொதுப்பணித்துறை இடத்தில் பூமி பூஜை செய்யப்பட்டு 1913-ல் கட்டி முடிக்கப்பட்டதாகவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்து இருந்தது.பென்னிகுக் மறைந்த பின்னர் கட்டப்பட்ட கட்டிடம் என்பதால் அங்கு அவர் வாழ்ந்ததற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என முதலமைச்சர் மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சரும் விளக்கம் அளித்திருந்தனர். மேலும், சட்டசபையிலும் இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியிருந்தார்.

    இந்தநிலையில், எழுத்தாளர் முத்துகிருஷ்ணன் கருணாநிதி நூலகம் தொடர்பாக பென்னிகுவிக் பேரன்கள் டயானா கிப் மற்றும் டாம் கிப் ஆகியோருடன் பேசிய வீடியோ பதிவை அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதுகுறித்த அவரது ஃபேஸ்புக் பதிவில், ‘கலைஞர் நூலகமும் பென்னிகுவிக் அவர்களை தொடர்புபடுத்திய சர்ச்சை முடிவுக்கு வந்தது. முல்லைபெரியாறு அணையை கட்டிய பென்னிகுவிக்கின பேரன்கள் டயானா கிப் மற்றும் டாம் கிப் ஆகியோருடன் மதுரை கலைஞர் நூலகம் கட்டும் இடம் தொடர்பான சர்ச்சையை விவாதித்துக் கொண்டிருந்தேன்.


    அப்போது அவர்கள், ‘இந்த சர்ச்சை தேவையற்றது. இந்த நூலகம் கட்டுவதற்கு பென்னிகுவிக் குடும்பத்தார் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்றும் எங்கள் தாத்தா(பென்னிகுவிக்) இந்த பகுதியின் வளர்ச்சிகாக பாடுபட்டவர். மதுரையும் இந்த மொத்த பகுதியையும் அவர் மிகவும் விரும்பினார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதன் வளார்ச்சிக்காவே பெரியாறு அணையை முழுமையான ஈடுபாட்டுடன் கட்டினார். இந்த நூலகம் அமைய வேண்டும். இதற்கு எங்கள் குடும்பம் முழுமையாக உறுதுணையாக இருக்கும் என்றும் இந்த கலைஞர் நூலகத்திற்கு நாங்கள் லண்டனில் இருந்து இயன்றால் புத்தகங்களை பரிசளிப்போம் என்றும் கூறினார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
    Published by:Karthick S
    First published: