மாஸ்க் அணியாதவர்களிடம், தங்கள் கூகுள் பே மூலம் அபராதம் வசூலிக்கும் மாநகராட்சி அதிகாரிகள்

மாநகராட்சி அதிகாரிகள் மீது பகீர் புகார்

அதிகாரிகள் கொடுத்த ரசிது முறையற்ற போலி ரசீதைப் போன்று இருப்பதாக குற்றம்சாட்டினர். 

 • Share this:
  மாஸ்க் அணியவில்லை என கூறி பொது மக்களிடம் வசூல் வேட்டையில் ஈடுபடும் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் தங்களது சொந்த கூகுள் பே மூலம் வங்கி கணக்குக்கு பணம் அனுப்ப சொல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

  சென்னை பள்ளிகரனை மாநகராட்சி வார்டு அலுவலகம் அருகில் சென்னை மாநகராட்சி 14வது மண்டல வருவாய்துறை அதிகாரி பிரகாஷ் மற்றும் நவீன்ராஜ் மற்றும் பள்ளிகாரணை போலீசார் ஆகியோர் மாஸ்க் அணியாத வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து கட்டணம் வசூலித்து வந்துள்ளனர்.

  அப்பொழுது அவ்வழியாக அதே பகுதியை சேர்ந்த இளைஞர்களான ஜெயபிரகாஷ், மனீஸ் இருவரும் இருசக்கர வாகனத்தில் மாஸ்க் அனியாமல் வந்ததால் வாகன தனிக்கையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் அவர்களை நிறுத்தி மாஸ்க் அணியவில்லை என கூறி ரூபாய் 200 அபராதம் விதித்துள்ளனர்.

  Also Read: ஷரியா சட்டப்படி பெண்களுக்கு உரிமை, எங்களால் எந்த நாட்டுக்கும் ஆபத்தில்லை – தாலிபான்களின் முதல் பிரஸ்மீட் ஹைலைட்ஸ்!

  அதில் அபராதமாக வசூலிக்கப்படும் பணத்தை தங்கள் சொந்த வங்கி கணக்கான Google Pay நம்பருக்கு அபராத தொகையை அனுப்பும் படி கூறி பணத்தை பெற்று முழுமையாக பூர்த்தி செய்யாத ரசீதுகளை கொடுத்துள்ளனர். அதை பார்த்த பாதிக்கப்பட்டவர்கள் அதிகாரிகள் கொடுத்த ரசிது முறையற்ற போலி ரசீதைப் போன்று இருப்பதாக குற்றம்சாட்டினர்.

  இதுகுறித்து கட்டணம் செலுத்திய இளைஞர்கள் கேட்கும் பொழுது நவீன் ராஜீ என்ற அதிகாரி தாங்கள் அதை அலுவலகம் சென்றபின் செலுத்திவிடுவோம் அதை கேட்கும் உரிமை உங்களுக்கு எல்லாம் இல்லை என கூறி ஒறுமையில் பேசி அந்த இளைஞரை மிரட்டியதாக அந்த இளைஞர்கள் தெரிவித்தனர்.

  Also Read:  நீரஜ் சோப்ரா மருத்துவமனையில் அனுமதி: வரவேற்பு ஊர்வலத்திலிருந்து பாதியில் வெளியேறினார்!

  முறையற்ற ரசீதை வழங்கி வசூலிக்கும் கட்டணத்தை தங்கள் சொந்த வங்கி கணக்குக்கு அனுப்ப கோரி அராஜகத்தில் ஈடுபடும் இதுபோன்ற அதிகாரிகள் மீது அரசு  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட இளைஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

  அதேபோல் அந்த பகுதியில் மாஸ்க் அனியாமல் வந்த ஏராளமானோர் தங்களுக்கு விதித்த அபராதத்தை நவின்ராஜ் அவருடைய சொந்த கூகுல் பே மூலம் அவருடைய வங்கி கணக்கிற்கு அபராதத்தை அனுப்பியுள்ளார்.

  Also Read:  ஆண் குழந்தைக்காக 8 முறை கருக்கலைப்பு, 1500 ஸ்டீராய்ட் ஊசிகள் – கொடூர கணவரிடம் பட்ட அவஸ்தைகள்!

  அதில் ஒரு நபருக்கு ரூபாய் 200 அபராதம் விதித்துள்ளனர். ஆனால் அவர் நவின்ராஜ் கூகுள் பே எண்ணிற்கு ரூபாய் 100 மட்டுமே அனுப்பியிருந்தார் அதற்கான ஆதாரங்களையும் தொலைகாட்சிக்கு அனுப்பியுள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  200 ரூபாய்க்கு அபராதம் விதித்து ரசிது கொடுத்த அதிகாரிகள் 100 ரூபாய் தனது வங்கி கணக்கிற்கு வந்ததும் எதுவுமே சொல்லாமல் அவரை அங்கிருந்து அனுப்பிவிட்டது பல சந்தேகங்களை எழுப்புவதாக பாதிக்கப்பட்ட இளைஞர்கள் தெரிவித்தனர்.

  ப.வினோத்கண்ணன் செய்தியாளர்  சென்னை இசிஆர்
  Published by:Arun
  First published: