ஊரடங்கை முன்னிட்டு அதிக கட்டணம் வசூலித்த 304 ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம்!

தமிழகத்தில் ஊரடங்கை முன்னிட்டு பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த 304 ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதித்த போக்குவரத்து துறை அதிகாரிகள் , 25 பேருந்துகளை பறிமுதல் செய்தனர்

தமிழகத்தில் ஊரடங்கை முன்னிட்டு பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த 304 ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதித்த போக்குவரத்து துறை அதிகாரிகள் , 25 பேருந்துகளை பறிமுதல் செய்தனர்

 • Share this:
   தமிழகத்தில் ஊரடங்கை முன்னிட்டு பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலித்த 304 ஆம்னி பேருந்துகளுக்கு அபராதம் விதித்த போக்குவரத்து துறை அதிகாரிகள் , 25 பேருந்துகளை பறிமுதல் செய்தனர்.

  தமிழகத்தில் இன்று தொடங்கி வரும் 24ம் தேதி வரை முழு ஊரங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. முழு ஊரடங்கின்போது, அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயங்காது என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டது.

  ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின்னர் 8-ஆம் தேதி மற்றும் 9-ம் தேதி பொதுமக்கள் சிரமம் இல்லாமல் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு தமிழக அரசு 48 மணி நேர போக்குவரத்து சேவையை வழங்க திட்டமிட்டது

  அதனடிப்படையில் ஆம்னி பேருந்துகளும் முழுமையாக இயங்குவதற்கு  அரசு அனுமதி வழங்கியது.

  எனினும், பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் அவ்வாறு அதிக கட்டணம் வசூலித்தால் 10 ஆயிரம் ரூபாய்   வரை அபராதம் விதிக்கப்படும் மற்றும் 6 மாத சிறை தண்டனை வழங்கப்படும் என்றும் போக்குவரத்து துறை சார்பில் ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு  எச்சரிக்கப்பட்டது.

  இருந்தபோதிலும் 300க்கும் மேற்பட்ட  ஆம்னி பேருந்துகள் பயணிகளிடம் அதிக கட்டணத்தை வசூல் செய்து பேருந்துகளை இயக்கியதாக புகார் எழுந்தது. இந்த புகாரை விசாரித்த போக்குவரத்து துறை அதிகாரிகள் அதிக கட்டணம் வசூல் செய்த 304 ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி 38 லட்சத்து 12890 ரூபாய் அபராதம் கட்டணம் வசூல் செய்யப்பட்டுள்ளது மேலும் 25 ஆம்னி பேருந்துகள் வழியிலேயே சிறைபிடிக்கப்பட்டன.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Murugesh M
  First published: