மெரினாவில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சமாதி அருகே கடலில் 80 கோடி ரூபாய் செலவில் 134 அடி உயரத்தில் பேனா நினைவு சிலை அமைக்கும் தமிழக அரசின் முடிவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் முதலமைச்சரும், மறைந்த திமுக தலைவருமான கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 39 கோடி ரூபாய் செலவில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் நடந்து கொண்டிருக்க கூடிய நிலையில், நடுக்கடலில் 80 கோடி ரூபாய் செலவில் பிரமாண்ட பேனா வடிவம் ஒன்றை 134 அடி உயரத்திற்கு அமைக்க அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நினைவு சிலையை மக்கள் பார்வையிட 650 மீட்டர் தூரத்திற்கு இரும்பு பாலம் அமைக்கவும், இந்த பாலத்தில் நடந்து செல்லும் பகுதி முழுவதும் கண்ணாடி தரையாக அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
அரசின் இந்த முடிவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கருணாநிதி நினைவாக கடலுக்குள் பேனா வடிவில் நினைவு சிலை அமைக்க நிதி இருக்கும் அரசிடம், மக்கள் நலத்திட்டங்களுக்கு நிதி இல்லையா? எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனார்.
மெரினா கடற்கரையில் கருணாநிதிக்கு பிரம்மாண்டமாக நினைவு மண்டபம் அமைக்கப்படும் நிலையில், தற்போது மீண்டும் மக்கள் வரிப்பணத்தில் பேனா வடிவ சின்னம் அமைப்பதால் யாருக்கு என்ன லாபம் என்று கேள்வியெழுப்பியுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த், இதற்கான நிதியை சாலை உள்ளிட்ட வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்தலாம் என்று யோசனை தெரிவித்துள்ளார். மேலும், நினைவுச்சின்னம் அவசியம் எனில் திமுக அறக்கட்டளைக்கு சொந்தமான பணத்தை வைத்து அமைத்து கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மெரினா கடலில் பேனா நினைவு சிலை அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், இத்திட்டத்தை எதிர்ப்பது கருணாநிதிக்கு செய்யும் துரோகம் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், மெரினாவில் நடுக்கடலில் கருணாநிதியின் பேனா வடிவ நினைவுச் சிலை அமைப்பது தொடர்பாக இன்னும் அதிகாரப்பூர்வ முடிவு எடுக்கப்படவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
மெரினா கடலில் கருணாநிதிக்கு பேனா நினைவு சிலை அமைக்க மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் அனுமதியளித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், பேனா நினைவு சிலை அமைக்கும் விவகாரத்தில் தமிழக அரசு என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: DMK, DMK Karunanidhi, Karunanidhi's memorial