முகப்பு /செய்தி /தமிழ்நாடு / பேரறிவாளன் விடுதலையைத் தொடர்ந்து மீதமுள்ள ஆறு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் - பழ.நெடுமாறன்

பேரறிவாளன் விடுதலையைத் தொடர்ந்து மீதமுள்ள ஆறு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் - பழ.நெடுமாறன்

பேரறிவாளன் விடுதலை

பேரறிவாளன் விடுதலை

Perarivalan Released : பேரறிவாளன் விடுதலை வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு என பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.

  • Last Updated :

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 31 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்துவரும் பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய பேரறிவாளன், “நல்லவருக்கு விளையும் கேடு” என்பது போல் தான் எனது சிறைவாசம். நல்லவர்கள் வாழவேண்டும் தீயவர்கள் ஏற வேண்டும் என்பது தான் நியதி. எங்கள் பக்கம் இருந்த நியாயம் தான் எங்களுக்கு வலிமை கொடுத்தது. எனது குடும்பம், உறவுகளின் பாசம் தான் என்னை இந்த அளவுக்கு கொண்டு வந்திருக்கிறது என்று நெகிழ்ச்சியாகத் தெரிவித்தார்.

Must Read : மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு ப.சிதம்பரத்தை நிறுத்த அதிக வாய்ப்புள்ளது - கே.எஸ்.அழகிரி

இந்நிலையில், பேரறிவாளனின் விடுதலைக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதன்படி, உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் தஞ்சையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பேரறிவாளன் விடுதலை என்பது வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு என்றும், இதன் மூலம் நீதி நிலை நிறுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் இந்த தீர்ப்பின் அடிப்படையில், மீதமுள்ள ஆறு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என அவர் தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

top videos

    மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய 26 குடும்பத்தினருக்கும் மத்திய அரசும், மாநில அரசும் நிவாரணம் வழங்க வேண்டும். இது மனிதாபிமான செயல் எனவும் அவர் தெரிவித்தார். இந்தத் தீர்ப்பினை அடிப்படையாக கொண்டு 25 ஆண்டுகளாக சிறையில் வாடும் இஸ்லாமிய சகோதரர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என அவர் தெரிவித்தார்.

    First published:

    Tags: Pazha Nedumaran, Perarivalan, Thanjavur