EXCLUSIVE: இந்துத்துவ கட்டமைப்பை உடைப்பதில் ஸ்டாலின் முனைப்பு காட்டவில்லை...! பழ.கருப்பையா பேட்டி

EXCLUSIVE: இந்துத்துவ கட்டமைப்பை உடைப்பதில் ஸ்டாலின் முனைப்பு காட்டவில்லை...! பழ.கருப்பையா பேட்டி
பழ கருப்பையா
  • News18
  • Last Updated: December 12, 2019, 2:56 PM IST
  • Share this:
சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும், இலக்கியவாதியுமான பழ.கருப்பையா திமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்த நிலையில் அதற்கான காரணம் குறித்து நியூஸ் 18 தமிழ்நாடு செய்திக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.

திமுக தலைமை மீது என்ன அதிருப்தி எதனால் கட்சியிலிருந்து விலகியுள்ளீர்கள்?

ஸ்டாலின் தன்னைச்சுற்றி அறிவு வட்டத்தை உருவாக்கிக் கொள்ளவில்லை. இந்துத்துவா சார்ந்த பிரிவினைவாத கொள்கை அடிப்படையிலான கட்டமைப்பு நாட்டில் வலுப்பெற்று வரக்கூடிய சூழலில் திமுக இந்துத்துவ கட்டமைப்பை உடைப்பதில் முனைப்பு காட்டவில்லை. தெளிவான கொள்கையோடு முழுமையான எதிர்ப்பையும் பதிவு செய்யவில்லை அதன் காரணமாகவே கட்சியை விட்டு விலக முடிவு செய்தேன்.


திமுக மற்றும் அதிமுக இரண்டு மீதும் ஊழல் குற்றச்சாட்டுகளை வைக்கிறார்கள். இரண்டு கட்சிகளில் மேலேயே பயணித்த உங்களுக்கு இந்த குறைகள் எல்லாம் முன்பே தெரியாதா?

இரண்டு கட்சிகளிலும் பயணித்த போதும் அதன் குறைபாடுகள் தெரிந்தே பயணித்தேன். மோடியை எதிர்க்க வேண்டும் என்றால் அப்பொழுது திமுகவின் குறைபாடுகளை பேசிக் கொண்டிருப்பதால் எந்த பயனும் ஏற்படாது. இந்துத்வாவிற்கு எதிராக பேச வேண்டிய நிலையில் திமுகவின் குறைபாட்டை அப்போது பேசிக்கொண்டிருந்தால் அதில் எந்த பயனும் இருந்திருக்காது.

நடிகர் ரஜினிகாந்த் நடிகர் கமலஹாசன் இருவரும் அரசியலுக்கு வந்துள்ளார்கள், அவர்களுடைய அரசியல் வருகை பற்றியும், அவரோடு இணைந்து பயணிக்க வாய்ப்பு உண்டா??தாங்கள் எதை நோக்கி பயணிக்கிறோம் என்பதையே இரண்டு பேரும் இதுவரை தெளிவுபடுத்தவில்லை. நாட்டில் எந்த பிரச்சினை நடந்தாலும் அது குறித்து அவர்கள் தெளிவான கருத்துக்களையும் முன்வைப்பதில்லை. முதலில் அவர்கள் கருத்துக்களை முன்வைத்து அரசியல் செய்தால் அவர்கள் குறித்து பேசலாம்.

ரஜினி தன்மீது காவி சாயம் பூச முயற்சிக்கிறார்கள் என்று கூறியிருக்கிறாரே ரஜினியோடு இணைந்து பயணிக்க வாய்ப்பிருக்கிறதா??

ரஜினி காவி அடையாளத்தில் இருந்து விடுபட நினைப்பது சரியானதுதான். அவருடன் சேர்ந்து பயணிப்பது குறித்தெல்லாம் நான் தற்போது வரை முடிவு செய்யவில்லை

எடப்பாடி பழனிச்சாமியின் மூன்று ஆண்டுகால ஆட்சி குறித்து உங்கள் கருத்து என்ன?

திமுக அதிமுக இரண்டும் ஊழல் என்கின்ற ஒரே கொள்கையுடைய கட்சிகள் தான் அதைப் பற்றி சொல்வதற்கு எதுவுமில்லை

உங்களுடைய அடுத்த கட்ட திட்டம் என்ன?

நல்லவற்றை சிந்தித்து நல்லவற்றை பேசி தனிமையில் பயணிப்பேன். சேர்ந்து பயணிக்க ஆட்கள் கிடைக்கும் வரை என்னுடைய பயணம் தனிமையானதாகவே இருக்கும்.

Also see...
First published: December 12, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்