ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

Payment Apps மூலம் அடிக்கடி பணத்தை அனுப்பும் பழக்க கொண்டவர்கள் இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்!

Payment Apps மூலம் அடிக்கடி பணத்தை அனுப்பும் பழக்க கொண்டவர்கள் இந்த தவறை மட்டும் செய்து விடாதீர்கள்!

நீங்கள் GPay, Paytm, PhonePe போன்ற UPI பேமெண்ட் ஆப்ஸ்களை பயன்படுத்துபவரா?

நீங்கள் GPay, Paytm, PhonePe போன்ற UPI பேமெண்ட் ஆப்ஸ்களை பயன்படுத்துபவரா?

நீங்கள் GPay, Paytm, PhonePe போன்ற UPI பேமெண்ட் ஆப்ஸ்களை பயன்படுத்துபவரா?

  • 2 minute read
  • Last Updated :

தொழில்நுட்பம் அசுர வளர்ச்சி அடைந்துள்ள நிலையில் ஸ்மார்ட் ஃபோன் மூலம் அனைத்துமே சாத்தியமாகிறது. ஆன்லைனில் பொருட்களை வாங்குவதில் இருந்து பணபரிவர்தனைகள் வரை நொடியில் நடக்கிறது. ஒரு பேங்க் அக்கவுண்ட்டில் இருந்து மற்றொரு பேங்க் அக்கவுண்ட்டிற்கு பணம் அனுப்ப உதவும் UPI பேமெண்ட் ஆப்ஸ்கள் மூலம் சில வினாடிகளில் பணபரிவர்தனைகள் முடிவடைகின்றன.

நீங்கள் GPay, Paytm, PhonePe போன்ற UPI பேமெண்ட் ஆப்ஸ்களை பயன்படுத்துபவரா..? இந்த டூல்ஸ்கள் நமது பரிவர்த்தனைகளுக்கு எளிதாக இருக்கும் அதே நேரத்தில் சில நன்மைகள் மற்றும் தீமைகளை கொண்டுள்ளதையும் நாம் கவனிக்க வேண்டும்.

இது போன்ற பேமெண்ட் ஆப்ஸ்களை பயன்படுத்தும் சைபர் மோசடிகளுக்கு இரையாகாமல் இருக்க யூஸர்கள் UPI பேமெண்ட் பாதுகாப்பு டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸ்களை அறிந்திருக்க வேண்டும். ரேண்டம் லிங்க்ஸை கிளிக் செய்யாமல் இருப்பது, PIN நம்பர், பாஸ்வேர்ட் போன்ற அத்தியாவசிய பரிவர்த்தனை விவரங்களை பாதுகாப்பாக வைத்திருப்பது போன்ற சில எளிய வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

UPI பரிவர்த்தனை மோசடிக்கு ஆளாகாமல் இருக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய சில டிப்ஸ்கள் இங்கே..

உங்கள் PIN நம்பரை ஷேர் செய்ய வேண்டாம்:

UPI-யில் மோசடிக்கு ஆளாகாமல் இருக்க கடைபிடிக்க வேண்டிய முதல்படி இது. நண்பர்கள் அல்லது மிகநெருங்கிய ஒரு சில குடும்ப உறுப்பினர்களை தவிர வேறு குடும்ப நபர்கள், நீங்கள் மிகவும் நம்பும் ஒருவர் என யாராக இருந்தாலும் சரி, UPI-யின் PIN நம்பரை யாருடனும் ஷேர் செய்வது நீங்கள் மோசடிகளுக்கு இலக்காகும் வாய்ப்பை அதிகரிக்கிறது. ஒருவேளை மனைவி அல்லது உங்கள் பெற்றோரை தவிர வேறு யாரிடமாவது PIN நம்பரை வெளிப்படுத்தியிருந்தால் உடனடியாக PIN நம்பரை மாற்றி விடுங்கள்.

ஜனவரி 1 முதல் ஏடிஎம்மில் பணம் எடுக்க அதிக செலவாகும்...வர போகும் ரூல்ஸ் அப்படி!

ஸ்டராங் பாஸ்வேர்ட்களை பயன்படுத்தவும்:

எப்போதுமே ஸ்டராங் பாஸ்வேர்ட் மூலம் உங்கள் ஃபோன் மற்றும் நீங்கள் பயன்படுத்தும் பேமெண்ட் ஆப்ஸ்களை லாக் செய்து கொள்ளுங்கள். பொதுவாக பலர் அவர்களது பெயர், பிறந்த தேதி, மொபைல் எண் போன்றவற்றை பாஸ்வேர்டுகளாக பயன்படுத்துகிறார்கள். ஆனால் இதை விர்க்க வேண்டும். உங்கள் பாஸ்வேர்டை ஸ்டராங்கானதாக மாற்ற லெட்டர்ஸ், நம்பர்ஸ் மற்றும் கேரக்டர்களை மிக்ஸ் செய்து உருவாக்க வேண்டும்.

சரிபார்க்கப்படாத லிங்க்ஸை கிளிக் செய்ய வேண்டாம்:

சரிபார்க்கப்படாத அக்கவுண்ட்ஸ் (unverified accounts) அல்லது இ-மெயில் உள்ளிட்டவற்றிலிருந்து அடிக்கடி போலி மெசேஜ்கள் வரும். அவற்றை ஒருபோதும் கிளிக் செய்து விடாதீர்கள். போலி மெசேஜ்களை அனுப்புவதன் மூலம், தனிநபர்களை லாபகரமான சலுகைகள் கொடுப்பதாக கவர்ந்திழுத்து, பின், OTP போன்றவற்றை மோசடி நபர்கள் கேட்கிறார்கள்.

இது தவிர உங்கள் பேங்க்அல்லது வேறு ஏதேனும் நிறுவனத்தில் இருந்து அழைப்பது போல் நடித்து உங்கள் தனிப்பட்ட மற்றும் அக்கவுண்ட் விவரங்களை கேட்கலாம். இது போன்ற போலி லிங்க்ஸ்களைக் கிளிக் செய்வதன் மூலம் அல்லது மோசடி கால்களுக்கு பதிலளிப்பதன் மூலம் பலர் பரிவர்த்தனை மோசடி அல்லது சைபர் மோசடிக்கு பலியாகிவிடுகிறார்கள். எனவே இவற்றை தவிர்க்கவும்.

வருஷம் பொறந்த உடனே ஜனவரி மாதத்தில் மட்டுமே இத்தனை விடுமுறைகள்!

பரிவர்த்தனை முறையில் எளிமை:

ஒரே நேரத்தில் பல பேமெண்ட்ஸ் ஆப்ஸ்களை பயன்படுத்துவது மோசடிக்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. எனவே பேமெண்ட்ஸ் ஆப்ஸ்களில் ஒன்றை மட்டும் பயன்படுத்த முயற்சிக்கவும். அதுவும் நம்பகமான மற்றும் சரிபார்க்கப்பட்ட பேமெண்ட்ஸ் ஆப்ஸாக இருபத்தி உறுதி செய்து கொள்ளுங்கள்.

UPI App-ஐ தொடர்ந்து அப்டேட் செய்யவும்..

ஒவ்வொரு அப்டேட்டும் சிறந்த அம்சங்களையும், நன்மைகளையும் தருகிறது. எனவே நீங்கள் பயன்படுத்தும் UPI பேமெண்ட் ஆப்ஸில் லேட்டஸ்ட் அப்டேட் வந்தால் தவறாமல் அதை அப்டேட் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published: