முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை; தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்; சசிகலாவின் அதிரடி பிளான்!!

ஜெயலலிதா நினைவிடத்தில் மரியாதை; தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம்; சசிகலாவின் அதிரடி பிளான்!!

சசிகலா

சசிகலா

சசிகலா தனது ஆதரவாளர்களிடம் தொலைபேசி மூலம் நாள்தோறும் பேசி நம்பிக்கை அளித்து வருகிறார். அவருடன் பேசும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை அதிமுகவிலிருந்து அடுத்தடுத்து நீக்கப்பட்டு வருகிறார்கள்.

  • Last Updated :

வரும் வாரம் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்திய பிறகு தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல வி.கே.சசிகலா திட்டமிட்டுள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சொத்து குவிப்பு வழக்கில் சிறையிலிருந்து விடுதலை பெற்று வெளியே வந்தார் சசிகலா, அப்போது நேரடியாக ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழ்நாடு அரசு கட்டுமானப் பணிகள் முழுமையடையாததால் பொதுமக்கள் பார்வைக்கு அனுமதி இல்லை என அப்போதைய அதிமுக அரசு தெரிவித்திருந்தது. இதனால், சசிகலா அப்போது ஜெயலலிதா நினைவிடம் செல்லவில்லை.

இதையடுத்து அடுத்த சில மாதங்களில் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவிருந்த நிலையில், தீவிர அரசியலில் இருந்து தான் விலகுவதாக அறிக்கை கொடுத்தார். நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தேல்வியை தழுவியது. இந்நிலையில் சசிகலா தனது ஆதரவாளர்களிடம் தொலைபேசி மூலம் நாள்தோறும் பேசி நம்பிக்கை அளித்து வருகிறார். அவருடன் பேசும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை அதிமுகவிலிருந்து அடுத்தடுத்து நீக்கப்பட்டு வருகிறார்கள்.

Also read: இவர்கள் கொங்குநாடு கேட்கிறார்கள்.. ராமதாஸ் வட மாவட்டங்களை பிரித்து கேட்கிறார்.. என்னாவது தமிழகம்? திருநாவுக்கரசர் கேள்வி

top videos

    இந்நிலையில், கொரொனா தொற்றின் தீவிரம் தமிழ்நாட்டில் தற்போது குறைய தொடங்கி உள்ள நிலையில் வரும் வாரத்தில் சசிகலா மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்திய பிறகு தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல இருக்கிறார், அதற்கு முன்பாக தன்னுடைய நிலைப்பாடு குறித்து அறிக்கை கொடுப்பார் என்றும் அவருடைய வட்டாரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    First published:

    Tags: Jayalalithaa memorial, Sasikala, VK Sasikala