Home /News /tamil-nadu /

தடுப்பூசி செலுத்தாத ஊழியர்களின் ஊதியம் நிறுத்தப்படாது: தமிழக மின்வாரிய தலைவர் அறிவிப்பு

தடுப்பூசி செலுத்தாத ஊழியர்களின் ஊதியம் நிறுத்தப்படாது: தமிழக மின்வாரிய தலைவர் அறிவிப்பு

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

தடுப்பூசி செலுத்தாத மின்வாரிய ஊழியர்களின் ஊதியம் நிறுத்தப்படாது என தமிழக மின்வாரிய தலைவர் அறிவித்துள்ளார்.

    தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத மின்வாரிய ஊழியர்களுக்கு டிசம்பர் மாத ஊதியம் நிறுத்தப்படும் என்ற அறிவிப்பை திரும்பப் பெறுவதாக மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

    மின்வாரிய ஊழியர்கள் அனைவரும் முதல் மற்றும் 2ம் தவணை தடுப்பூசியை வரும் 7ம் தேதிக்குள் செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் அவ்வாறு தடுப்பூசி செலுத்தாத ஊழியர்கள், அலுவலர்களுக்கு டிசம்பர் மாத ஊதியம் நிறுத்தம் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. மருத்துவ காரணங்களுக்காக தடுப்பூசி செலுத்தாத அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உரிய மருத்துவ சான்றிதழை பெற்று சமர்ப்பிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.

    இந்த அறிவிப்பானது மின்வாரிய ஊழியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த சுற்றறிக்கை குறித்து மின்சார வாரியம் அளித்துள்ள விளக்கத்தில், “மின்சாரவாரியத்தில் பணிபுரியும் பெரும்பாலானோர் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாகவும், அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்பதால் இவ்வாறு சுற்றறிக்கை அனுப்பப்பட்டதாக” கூறப்பட்டிருந்தது.

    இந்தநிலையில் ஊதியம் நிறுத்தம் செய்யப்படும் என்ற அறிவிப்புக்கு ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனையடுத்து ஊதியம் நிறுத்தம் செய்யப்படும் என்ற அறிவிப்பை திரும்பப்பெறுவதாக மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

    தடுப்பூசியின் அவசியம் குறித்து ஊழியர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவே ஊதியம் நிறுத்தப்படும் என்று கூறியதாகவும் தற்போது அந்த அறிவிப்பு திரும்பப் பெறுவதாகவும் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Electricity

    அடுத்த செய்தி