ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பட்டணப் பிரவேசம் வருகின்ற 22-ஆம் தேதி சிறப்பாக நடைபெறும் - தருமபுரம் ஆதீனம் பிரத்யேகப் பேட்டி

பட்டணப் பிரவேசம் வருகின்ற 22-ஆம் தேதி சிறப்பாக நடைபெறும் - தருமபுரம் ஆதீனம் பிரத்யேகப் பேட்டி

தருமபுரம் ஆதீனம்

தருமபுரம் ஆதீனம்

Dharmapuram Adheenam Exclusive | சுதந்திரத்துக்கு முன்பு நடைபெற்ற பட்டணப்பிரவேசம் நிகழ்வில் ஆங்கிலேயே அரசு அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். பின்னர் காங்கிரஸ் ஆட்சி காலத்திலும், கலைஞரின் ஆட்சியிலும் பட்டண பிரவேசம் நடந்துள்ளது என தருமபுரம் ஆதீனம் விளக்கம் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  பட்டணப் பிரவேசம் விழா வருகின்ற 22-ஆம் தேதி சிறப்பாக நடைபெறும் என தருமபுரம் ஆதீனம் பிரத்யேகப் பேட்டி அளித்துள்ளார்.

  மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் உக்தவேதீஸ்வரர் கோயிலில் குடமுழுக்கு விழாவுக்காக தங்கியிருக்கும், தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் நியூஸ் 18 தமிழ்நாடு வாயிலாக தெரிவித்த போது, அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை என 2000 ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளுவர் பேசியதில் இருந்து தெரிகிறது சிவிகைப் பல்லக்கின் பழைமை. புண்ணியம் செய்வார்கள் பல்லக்கில் செல்வார்கள் என பரிமேலழகர் இக்குறளுக்கு உரை எழுதியுள்ளார். 1300 ஆண்டுகளுக்கு முன்பு 14 வயது திருஞானசம்பந்தர் அமர்ந்த பல்லக்கை 80 வயது அப்பர் சுவாமிகள் சுமந்து செல்லும் பேறு பெற்றேன் என்று குறிப்பிடுகிறார்.

  300 ஆண்டுகளுக்கு முன்பு அபிராமி பட்டர் சிவிகை பற்றி குறிப்பிடுகிறார். எனவே, பல்லக்கு மனிதனை மனிதன் சுமப்பது அல்ல. குருநாதரை சீடர்கள் சுமப்பது. சபரிமலையில் டோலி சுமப்பது, கேதார்நாத், பத்ரிநாத்திலும் சுமக்கிறார்கள். இதனால் மனித உரிமை மீறல் ஏற்படுகிறது என சொல்வது அழகல்ல. சிவிகை, திருச்சின்னம், விசிறி, கை தீவிட்டி இவை அனைத்தும் ஆச்சாரிய மூர்த்திகளுக்கு உரியது.

  ALSO READ | தக்காளிக்கும் தக்காளி வைரஸூக்கும் எந்த சம்பந்தமும் இல்லை... சுகாதாரத்துறை செயலர் விளக்கம்!!

  குருபூஜையையொட்டி 10 நாள் விழாவில் கைப்பல்லக்கில் செல்வதும், 11-ஆம் நாளில் சிவிகைப் பல்லக்கில் செல்வதும் மரபாக உள்ளது. எல்லா நாளிலும் மடத்தைச் சுற்றி நடந்தும், காரினிலும் சென்றுவருகின்ற போதிலும், மடத்துக்குள் சென்று குருமகா சந்நிதானத்தை பார்க்க முடியாதவர்களுக்காக குருமகா சந்நிதானமே வீதியுலாவாக செல்வார். அவருக்கு வீடுகளில் பக்தர்கள் பூரணகும்ப மரியாதை செலுத்துவார்கள். குமரகுருபரருக்கு மதுரை திருமலைநாயக்க மன்னர் பட்டண பிரவேசம் நடத்தியிருக்கிறார். வெள்ளியம் பலவான முனிவருக்கு கர்நாடக ராஜபரம்பரையில் பட்டணப்பிரவேசம் நடத்தியுள்ளனர்.

  ஆதீனத் தம்பிரான் சுவாமிகள் விருத்தாச்சல தம்பிரானுக்கு திருவனந்தபுரம் மன்னர் பட்டணப்பிரவேசம் நடத்தியுள்ளார். தருமபுரம் ஆதீனம் 24-வது குருமகா சன்னிதானம் காலத்தில் சுதந்திரத்துக்கு முன்பு நடைபெற்ற பட்டணப்பிரவேசம் நிகழ்வில் ஆங்கிலேயே அரசு அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். பின்னர் காங்கிரஸ் ஆட்சி காலத்திலும், கலைஞரின் ஆட்சியிலும் பட்டண பிரவேசம் நடந்துள்ளது.

  ALSO READ |  அண்ணா, கருணாநிதி வழியில்லாமல் பெரியார், கம்யூனிஸ்ட் வழியில் ஸ்டாலின் ஆட்சி செய்கிறார் - அர்ஜூன் சம்பத் விமர்சனம்

  முதல்வர் ஸ்டாலின் ஆட்சி காலத்தில்தான் சிறு நெருடல் ஏற்பட்டது. அதையும், உடனடியாக அவர் நீக்கம் செய்து பாரம்பரிய விழா நடைபெற வேண்டும் என்று கோட்டாட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார். இதற்காக முயற்சிகளை மேற்கொண்ட முதல்வர், அமைச்சர், துறை அதிகாரிகள், அரசியல் கட்சியினர், அமைப்பினர் மற்றும் பக்தர்களுக்கு அருளாசிகள் வருகின்ற 22-ஆம் தேதி பட்டணப் பிரவேசம் சிறப்பாக நடைபெறும் இவ்வாறு தருமபுரம் ஆதீனம் தெரிவித்துள்ளார்.

  செய்தியாளர் : கிருஷ்ணகுமார்

  Published by:Sankaravadivoo G
  First published:

  Tags: Dharmapuram Aadheenam