ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

Beast | பீஸ்ட் படத்திற்கு பாமக எதிர்ப்பு - தமிழக அரசு தடுக்க வேண்டும் என கோரிக்கை

Beast | பீஸ்ட் படத்திற்கு பாமக எதிர்ப்பு - தமிழக அரசு தடுக்க வேண்டும் என கோரிக்கை

பீஸ்ட்

பீஸ்ட்

Beast : தமிழ்நாட்டில் பீஸ்ட் படம் வெளியிடுவதை தமிழக அரசு தடுக்க வேண்டும் என பாமக சிறுபான்மை பிரிவு சார்பாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  விஜய் நடித்துள்ள பீஸ்ட் படத்தை தமிழ்நாட்டில் வெளியிடுவதை தமிழக அரசு தடுக்க வேண்டும் என பாமக சிறுபான்மை பிரிவு சார்பாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாமக-வின் மாநில சிறுபான்மை பிரிவு செயலாளர் முனைவர் ஷேக்முகைதீன் அறிக்கை வாயிலாக கோரிக்கை விடுத்துள்ளார்.

  அந்த அறிக்கையில், ஒரு விசயத்தை பட்டி தொட்டி எங்கும் எடுத்து செல்லும், பேசப்படும் ஒரு அளவற்ற ஆற்றல் மிக்க துறை சினிமாத்துறை. நல்ல விசயங்களை கருத்தாக சொன்னால் சிறப்பாக இருக்கும். ஆனால் மதங்களை, சாதி, சமயங்களை இழிவாக காட்டும் வழக்கம் தற்போது அதிகமாக உள்ளது.

  அதில் நடிக்கும் நடிகர்கள் பல கோடிகள் சம்பளமாக பெற்றாலும், தான் நடிக்கும் படத்தில் யாரையும் புண்படுத்தாமல் நடிப்பதை தாங்கள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக விஜய், சூர்யா போன்றோர் கவனிக்க வேண்டும். உங்களுக்கு ரசிகர்கள் குறிப்பிட்ட மதம், சாதியை சார்ந்தவர் அல்லாமல் அனைத்து மதம், சாதிகளை சார்ந்த ரசிகர்கள் உள்ளனர்.

  விஜய் நடித்த பீஸ்ட் படம் இஸ்லாமியர்களை தீவீரவாதிகளாக காட்டி வெளிவருவதாகவும் அதனால் குவைத்தில் வெளியிட தடை உள்ளதாக தகவல் வருகிறது. இப்படி தகவல் பரவ விட்டால் தான், தங்கள் படம் ஓடும் என்று நினைக்கிறார்களோ தெரியவில்லை.

  Must Read : என் லவ்வர் கூட உனக்கு என்ன பேச்சு.. முடியைப் பிடித்து சாலையில் சண்டையிட்ட கல்லூரி மாணவிகள் - வைரலாகும் வீடியோ

  இப்படத்தில் ஒருவேளை இச்செய்தி உண்மையாக இருப்பின் சர்ச்சைகுரியதை நீக்கி வெளியிடுங்கள். இல்லையேல் தமிழக அரசு வெளியிடுவதை தடுக்க வேண்டும் என்று பாமக சிறுபான்மை பிரிவு சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  Published by:Suresh V
  First published:

  Tags: Actor Vijay, Beast, Pattali Makkal Katchi‎, PMK