திருவண்ணாமலையில் 13 வயது பழங்குடியின சிறுமியை கடத்திய மதபோதகர்.. சிறுமியின் நிலை என்ன?

Youtube Video

திருவண்ணாமலை மாவட்டத்தில், 13 வயது மலை வாழ் சிறுமியைக் கடத்திச் சென்ற 49 வயதான மதபோதகர் ஒரு மாதமாகியும் போலீசாரிடம் சிக்கவில்லை. சிறுமியின் கதி என்ன? மதபோதகர் போக்சோவில் சிக்குவாரா?

 • Share this:
  திருவண்ணாமலை மாவட்டம் போளூர் சிவராஜ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் 49 வயதான ஜெயராஜ். ஜவ்வாது மலையில் உள்ள மலைக் கிராமங்களில் கிறிஸ்தவ மதபோதனைகளில் ஈடுபட்டு வந்தார். மத போதகர் ஜெயராஜுக்கு ஏற்கனவே இரண்டு திருமணங்கள் நடைபெற்று விவாகரத்து ஆன நிலையில் தனிமையில் வசித்து வந்தார். மலைவாழ் மாணவிகளுக்கு டியூஷனும் நடத்தி வந்தார்; அவரிடம் 9-ஆம் வகுப்பு படித்து வந்த 13 வயது சிறுமி டியூஷன் படித்து வந்துள்ளார். இந்த நிலையில் அக்டோபர் மாதம் 24-ஆம் தேதி அந்த சிறுமியுடன் மதபோதகர் ஜெயராஜ் திடீரென காணாமல் போனார்.

  மேலும் படிக்க...ஸ்கூட்டரில் சென்ற தாய், மகள் சாலையோரம் சாக்கடையில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழப்பு.

  தேடிப்பார்த்தும் கிடைக்காததால், அக்டோபர் 25-ஆம் தேதி ஜமுனாமரத்தூர் காவல் நிலையத்தில் மதபோதகர் ஜெயராஜ் தனது மகளை கடத்திச் சென்றதாக சிறுமியின் தந்தை புகாரளித்தார். வழக்குப் பதிவு செய்த ஜமுனாமரத்தூர் காவல்துறையினர் மதபோதகர் ஜெயராஜை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

  இதையடுத்து சிறுமியின் தந்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்; அந்த மனு தற்போது நிலுவையில் உள்ளது. தனது மகளை கண்டுபிடித்து தரும்படி சிறுமியின் தந்தை காவல்துறை மற்றும் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.  மலை கிராமங்களில் மதபோதனை என்ற பெயரில் மலைவாழ் சிறுமியருக்கு பாலியல் தொந்தரவு நடப்பதாகவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிறுமியைக் கடத்திச் சென்ற மதபோதகர் சிக்குவாரா? சிறுமி மீட்கப்படுவாரா?  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Vaijayanthi S
  First published: