• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சிறுமிகளை பாலியல் தொழிலில் தள்ளிய பாதிரியாருக்கு 30 ஆண்டுகள் சிறை

சிறுமிகளை பாலியல் தொழிலில் தள்ளிய பாதிரியாருக்கு 30 ஆண்டுகள் சிறை

 பாதிரியார் அருள்தாசு

பாதிரியார் அருள்தாசு

பள்ளி சிறுமிகளை பாலியல் தொழிலுக்கு தள்ளியது தொடர்பான வழக்கை கடலூர் மகிளா நீதிமன்றம் விசாரித்து வந்தது. கடந்த 4-ம் தேதி 16 பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று தண்டனை விவரத்தை கடலூர் மகளிர் நீதிமன்றம் அறிவித்தது.

  • News18
  • Last Updated :
  • Share this:
பள்ளிச் சிறுமிகளை பாலியல் தொழிலில் தள்ளியது தொடர்பான வழக்கில் பாதிரியாருக்கு 30 ஆண்டுகள் சிறையும், 7 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து கடலூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

2014-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி கடலூர் மாவட்டம் திட்டக்குடி அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளியில் படித்த 8-ம் மற்றும் 9-ம் வகுப்பு மாணவிகள் இருவர் காணாமல் போன நிலையில், அவர்களை வடலூரில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சதீஷ்குமார் என்ற நபரிடமிருந்து போலீசார் மீட்டனர்.

இவர் மூலம் திட்டக்குடியைச் சேர்ந்த தனலட்சுமி என்பவர் மாணவிகளை மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதும், பின்னர் லட்சுமி, கலா, ஜெமீனா, சதீஷ்குமார் உள்ளிட்ட பாலியல் நபர்களிடம் மாறி மாறி விற்கப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டதும் தெரியவந்தது.

மேலும், இரு மாணவிகளையும் பாதிரியார் அருள்தாஸ் பாலியல் வன்கொடுமை செய்ததும் சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்தது. இந்த வழக்கில் வடலுர் சதீஷ்குமார், விருத்தாசலம் கலா, திட்டக்குடி தனலட்சுமி, மதபோகர் அருள்தாஸ் உள்ளிட்ட 16 பேர் மீது சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்தது.

சிறுமிகளை பாலியல் தொழில் ஈடுபடுத்தியவர்கள்


பள்ளி சிறுமிகளை பாலியல் தொழிலுக்கு தள்ளியது தொடர்பான வழக்கை கடலூர் மகிளா நீதிமன்றம் விசாரித்து வந்தது. கடந்த 4-ம் தேதி 16 பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று தண்டனை விவரத்தை கடலூர் மகளிர் நீதிமன்றம் அறிவித்தது.

சிறுமிகளை பாலியல் தொழில் ஈடுபடுத்தியவர்கள்


இந்த வழக்கில் பாதிரியார் அருள்தாசுக்கு 30 ஆண்டுகளும், கலா, தனலட்சுமி, ஸ்ரீதர், பாத்திமா, ராதா, ஷர்மிளாபேகம், கவிதா ஆகிய 7 பேருக்கு 20 ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அன்பழகனின் மனைவி அமுதா, ராதிகா ஆகிய இருவருக்கு 10 ஆண்டுகளும் சிறை விதித்த நீதிமன்றம், மோகன், மதிவாணன் ஆகிய இருவருக்கு இரட்டை ஆயுளும், அன்பு என்பவருக்கு மூன்று ஆயுளும், ஆனந்த்ராஜ், பாலசுப்பிரமணியன் ஆகிய இருவருக்கு நான்கு ஆயுளும் விதித்து தீர்ப்பளித்தது.

Also see...

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: