PASSENGERS THRONG CHENNAI METRO TRAINS AFTER CMRL ANNOUNCES FREE TRAIN JOURNEY ARU
மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய ஆர்வத்துடன் குவிந்த சென்னைவாசிகள்!
சென்னை மெட்ரோ ரயில்
இன்று பிற்பகல் 2 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில் அந்த வழித்தடத்தில் இலவசமாக இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்தது இதனை அடுத்து வட சென்னை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தனர்.
மெட்ரோ ரயிலில் இன்று இலவசமாக பயணிக்கலாம் என்ற அறிவிப்பையடுத்து குடும்பம் சகிதமாக இன்று மெட்ரோ ரயில்களில் மக்கள் பயணம் மேற்கொண்டனர்.
வண்ணாரப்பேட்டை முதல் திருவொற்றியூர் விம்கோ நகர் வரை முதற்கட்ட மெட்ரோ சேவையின் விரிவாக்க பணிகள் நிறைவடைந்து மெட்ரோ ரயில் சேவையை சென்னை வந்த பிரதமர் மோடி துவங்கி வைத்தார்.
இதனையொட்டி இன்று பிற்பகல் 2 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில் அந்த வழித்தடத்தில் இலவசமாக இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்தது இதனை அடுத்து
வட சென்னை பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தனர்.
இதன் காரணமாக மெட்ரோ இரயில் கூட்டம் நிரம்பி வழிந்தது... புதிய ரயில் சேவை இன்று தொடங்கப்பட்டதை அடுத்து விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரை, சென்னை செண்ட்ரல் முதல் பரங்கிமலை வரை அனைத்து வழித்தடத்திலும் பயணிகள் இலவசமாக பயணிக்கலாம் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்ததைத் தொடர்ந்து குடும்பம் சகிதமாக பொதுமக்கள் ரயிலில் பயணம் செய்தனர்..
வடசென்னை பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதுடன் இடங்களுக்கு விரைவாக செல்ல மெட்ரோ ரயில் சேவை உதவும் என்று மெட்ரோ ரயில்களில் இலவசமாக பயணித்த பயணிகள் கூறினர்.