மெட்ரோ ரயிலில் இனி இலவசமாக படம் பார்க்கலாம்... இன்று முதல் துவங்குகிறது 'சுகர் பாக்ஸ்' சேவை!

மெட்ரோ ரயிலில் இனி இலவசமாக படம் பார்க்கலாம்... இன்று முதல் துவங்குகிறது 'சுகர் பாக்ஸ்' சேவை!
கோப்பு படம்
  • News18
  • Last Updated: February 28, 2020, 3:31 PM IST
  • Share this:
மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகள் "சுகர் பாக்ஸ்" மொபைல் ஆப் மூலம் இனி இலவசமாக படங்கள், வெப் சீரிஸ் உள்ளிட்டவற்றை பார்த்து மகிழலாம்.


சென்னை மெட்ரோ ரயிலில் தினமும் சராசரியாக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். மேலும், பயணிகள் வருகையை அதிகரிக்க ரயில்வே நிர்வாகம் சார்பில் கலை நிகழ்ச்சிகள், மருத்துவ முகாம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக சுகர் பாக்ஸ் (Sugar box) எனும் மொபைல் ஆப் இன்று அறிமுகம் செய்யப்படுகிறது. மெட்ரோ ரயிலில் உள்ள வைஃபை வசதியை பயன்படுத்தி இந்த ஆப்பில் தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்கள், டிவி தொடர்கள், வெப் சீரிஸ் ஆகியவற்றை ஆன்லைன் மற்றும் ஆஃப் லைனில்  பார்த்து மகிழலாம்.

ஒரு முழுநீள படத்தை பதிவிறக்கம் செய்ய 10 நிமிடங்கள் மட்டுமே ஆவதாகவும், சென்னை விமான நிலையம் - வண்ணாரப்பேட்டை வரை பயணிக்க சுமார் 40 நிமிடங்கள் வரை ஆகும் நிலையில், பயணிகளுக்கு இந்த ஆப் பயனுள்ள வகையில் இருக்கும் என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Also see...First published: February 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading