ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

தமிழகத்திலும் ஒமைக்ரான் நுழைந்தது: நைஜிரியாவில் இருந்து வந்தவருக்கு தொற்று உறுதி!

தமிழகத்திலும் ஒமைக்ரான் நுழைந்தது: நைஜிரியாவில் இருந்து வந்தவருக்கு தொற்று உறுதி!

ஒமைக்ரான்

ஒமைக்ரான்

நைஜிராவில் இருந்து தோஹா வழியாக சென்னை வந்த நபருக்கு ஒமைக்காரன் தொற்று உறுதியாகியுள்ளது என்று தெரிவித்தார். அவரது குடும்பத்தினருக்கும் மரபணு சோதனை நடத்தப்பட்டுள்ளது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

நைஜிரியாவில் இருந்து விமானம் மூலம் தமிழகம் வந்த நபருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளரை சந்தித்தார்.  அப்போது அவர், தமிழகத்திற்கு வெளிநாடுகளில் இருந்து விமானத்தில் வந்தவர்களுக்கு  இதுவரை பரிசோதனை செய்யப்பட்டத்தில்  23 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

வீடுகளில் தங்கவைக்கப்பட்டு 8 நாட்களுக்கு பின்னர் மீண்டும் பரிசோதனை செய்தபோது, தொற்றுக்குள்ளானவர்கள் 14 பேர், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் 7 பேர். எனவே 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அதில் மூன்று பேர் அது குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் நாற்பத்தி ஒரு பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நைஜிராவில் இருந்து தோஹா வழியாக சென்னை வந்த நபருக்கு ஒமைக்காரன் தொற்று உறுதியாகியுள்ளது என்று தெரிவித்தார். அவரது குடும்பத்தினருக்கும் மரபணு சோதனை நடத்தப்பட்டுள்ளது. அனைவரும் தீவிர மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டவருடன் பயணித்த வளசரவாக்கத்தை சேர்ந்த நபருக்கும்  s gene drop இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.

இதையும் படிங்க: இந்தியாவை மதுரைவீரன், அய்யனார் போல் பிரதமர் மோடி காக்கிறார் - அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன்

தமிழகத்தில் இதுவரை 8 பேருக்கு s gene drop அதாவது ஒமைக்ரான் இருக்கலாம் என சந்தேகம் எழுந்து அதில் ஒருவருக்கு மரபணு பகுப்பாய்வில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மற்றவர்களின் மாதிரிகள் பகுப்பாய்வு செய்து முடித்தபின் முடிவுகள் தெரியும் என்றும் அமைச்சர் கூறினார்.

ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டவர் நலமாகவே உள்ளார். எட்டு பேரில் ஒரு 16 வயது குழந்தை உள்ளார். ஏழு பேரும் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பொதுமக்கள் இதன் தீவிரத்தை உணர்ந்து அனைவரும் தடுப்பூசிகளை மறக்காமல் செலுத்தி கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் 15% மக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் உள்ளனர். கூடிய விரைவில் 100% தடுப்பூசி என்ற இலக்கை எட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். பொதுமக்கள் இதனை கண்டு அச்சப்பட தேவையில்லை. தமிழ்நாடு முழுவதும் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

மேலும் படிங்க: தாலி பிரித்து கட்டும் நிகழ்வுக்கு பணமில்லை - செயின் பறிப்பில் ஈடுபட்ட புதுமாப்பிள்ளை

First published:

Tags: Omicron, Tamilnadu