கன்னியாகுமரி பாஜக கூட்டத்தில் காலி சேர்களை ஃபோட்டோ எடுத்தவர்கள் மீது தாக்குதல் முயற்சி!

Lok Sabha Election 2019 | மேடையில் பேசிக்கொண்டு இருந்த மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், தனது பேச்சை அவசர அவசரமாக முடித்துவிட்டு கூட்டத்தை நிறைவு செய்து சென்றார்

கன்னியாகுமரி பாஜக கூட்டத்தில் காலி சேர்களை ஃபோட்டோ எடுத்தவர்கள் மீது தாக்குதல் முயற்சி!
கன்னியாகுமரி பாஜக கூட்டத்தில் தகராறு
  • News18
  • Last Updated: March 28, 2019, 10:10 AM IST
  • Share this:
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்ற பொது கூட்டத்தில் இருக்கைகள் காலியாக இருப்பதை படம் பிடிக்க முயன்ற பத்திரிகையாளர்களை கூட்டத்தில் இருந்த சிலர் தகாத வார்தைகளால் திட்டி தாக்க முயற்சித்தனர்.

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள நாகராஜாகோவில் திடலில் நேற்று மாலை கூட்டணி கட்சிகளின் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

இதில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் , கன்னியாகுமரி பாராளுமன்ற வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.


பொதுக் கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் பேசும் போது சிலர் இருக்கைகளை விட்டு எழுந்து சென்றனர் பின்னர் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் பேச துவங்கினார். அதன் பிறகு ஏராளமான மக்கள் கூட்டத்தில் இருந்து எழும்பி சென்றனர்.

Read Also... மோடிக்கு நாடக தின வாழ்த்துகள் சொன்ன ராகுல்

இதனால் இருக்கைகள் காலியாக காணப்பட்டது. இதனை சில பத்திரிகை புகைப்பட கலைஞர்கள் படம் எடுக்க முயன்றனர். இதனை கண்ட சில கட்சித் தொண்டர்கள் அவர்களை மிகவும் தரைகுறைவாக பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்க முயன்றனர்.இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து மேடையில் பேசிக்கொண்டு இருந்த மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், தனது பேச்சை அவசர அவசரமாக முடித்துவிட்டு கூட்டத்தை நிறைவு செய்து சென்றார் இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

See Also... மக்களவைத் தேர்தல் 2019: சில சுவாரஸ்ய தகவல்கள்!

இதனை தொடர்ந்து கட்சியின் நிர்வாகிகள் செய்தியாளர்களை தாக்க முயன்றவர்களை சமாதானம் செய்ய முயற்சிகள் செய்தனர்.

Also See...

First published: March 28, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்