ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அதிமுகவில் சசிகலா? ஓ.பன்னீர்செல்வம் சூசக கருத்து!

அதிமுகவில் சசிகலா? ஓ.பன்னீர்செல்வம் சூசக கருத்து!

சசிகலா- ஓ.பன்னீர்செல்வம்

சசிகலா- ஓ.பன்னீர்செல்வம்

இரட்டை தலைமையின் கீழ் அதிமுக சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  அதிமுகவில் சசிகலாவை சேர்ப்பது தொடர்பாக  தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள் என்றும் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  -அதிமுகவின் பொதுச் செயலாளராக சசிகலா தன்னை கூறிவந்தாலும் இதனை ஏற்க அதிமுக தலைமை மறுத்து வருகிறது.  அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, அதிமுகவிற்கும் சசிகலாவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் சசிகலா பொதுச்செயலாளர் என கூறிவருவதற்கு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுப்போம் என்றும்  கூறியிருந்தார்.

  இதேபோல், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், சசிகலாவுக்கு அதிமுகவில் இடம் இல்லை என்றும் அவரை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர், அரசியலில் யார் வேண்டுமானாலும் வரலாம். அதை ஏற்பதும் ஏற்காததும் மக்களின் முடிவு.

  ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையிலேயே  அதிமுக செயல்பட்டு வருகிறது. அதிமுக தொண்டர்களின் இயக்கம். இரட்டை தலைமையின் கீழ் கழகம் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள் என்று தெரிவித்தார்.

  இதையும் படிங்க: சிலம்பம் வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் 3% இடஒதுக்கீடு அரசாணை எப்போது வெளியாகும் : அமைச்சர் விளக்கம்

  தொடர்ந்து பேசிய அவர்,  அதிமுக அரசு கொண்டு வந்த தாலிக்கு தங்கம், அம்மா உணவகம், மினி கிளினிக் போன்ற அனைத்து மக்கள் நல திட்டங்களையும் திமுக அரசு நிறுத்த கூடாது, தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும். அதிமுக அரசின் மக்கள் நல திட்டங்களை திமுக அரசு நிறுத்தினால் மக்களை திரட்டி நாங்கள் போராடுவோம்.

  திமுக அரசு ரொம்ப அவசரப்படுகிறார்கள். காழ்ப்புணர்ச்சியுடன் எதிர்கட்சியினரை அழித்து விட வேண்டும் என நினைக்கிறார்கள், அது நடக்காது. அரசியல் இயக்கங்களை நடத்துகிறவர்கள் கண்ணியத்தை கடைபிடிக்க வேண்டும். அது தொண்டனாக இருந்தாலும், தலைவனாக இருந்தாலும் ஒரே மாதிரி நடத்த வேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு என்றும் கூறினார்.

  மேலும் படிக்க: 5-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில் இடம்பெற்ற கீழடி: தமிழக தொல்லியல் துறை குறித்த தகவல் இல்லை என புகார்!

  அதிமுகவில் சசிகலாவுக்கு இடம் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார் உள்ளிட்டோர் கூறிவரும் நிலையில் ஓ.பன்னீர்செல்வம் கூறியள்ள கருத்து அக்கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

  Published by:Murugesh M
  First published:

  Tags: AIADMK, O Pannerselvam, VK Sasikala