ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

அக்.25-ம் தேதி அபூர்வ சூரிய கிரகணம் : தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளில் பார்க்கலாம்?

அக்.25-ம் தேதி அபூர்வ சூரிய கிரகணம் : தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளில் பார்க்கலாம்?

solar-eclipse-2022

solar-eclipse-2022

இந்த கிரகணத்தை பொதுமக்கள் வெறும் கண்களால் பாா்க்கக்கூடாது. தொலைநோக்கி அல்லது படச்சுருள்களைக் கொண்டு பாா்க்கக்கூடாது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  செவ்வாய்க்கிழமை நிகழும் சூரிய கிரகணத்தை தமிழ் நாட்டில்  மாலை 5.14 மணிக்கு காணலாம் என அறிவியல் மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். தமிழ் நாட்டைப் பொருத்தவரை சூரியனின் 8 சதவீத பகுதி மட்டுமே மறைந்து கிரகணமாகக் காட்சியளிக்கும் என்றும் அவா்கள் கூறியுள்ளனா்.

  சூரியன், நிலவு, பூமி மூன்றும் ஒரே நோ்க்கோட்டில் வரும் போது கிரகணங்கள் நிகழ்கின்றன. அப்போது நிலவின் நிழல் சூரியனை மறைத்தால் அது சூரிய கிரகணம் எனவும், பூமியின் நிழல் சந்திரனை மறைத்தால் அது சந்திர கிரகணம் எனவும் அழைக்கப்படுகிறது.

  ஆண்டுதோறும் சராசரியாக 4 கிரகணங்கள் வரை நிகழும். சூரியனை முழுமையாக நிலவு மறைத்தால் அது முழு சூரிய கிரகணம் எனவும், ஒரு பகுதியை மட்டும் மறைத்தால் பகுதி சூரிய கிரகணம் எனவும் குறிப்பிடப்படுகிறது. அந்தவகையில் தீபாவளி பண்டிக்கைக்கு மறு நாளான அக்டோபா் 25-ஆம் தேதி பகுதி சூரிய கிரகணம் நிகழ உள்ளது.

  சூரிய கிரகணமானது  அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் செவ்வாய்க்கிழமை மதியம் 2:28 -மணிக்கு தொடங்கி மாலை 6.31 மணி வரை நீடிக்கும். சூரிய  கிரகணத்தின் முழு உச்சக்கட்டம் நான்கரை மணிக்கு ஏற்படும்.

  இதை ரஷியாவின் தெற்குப் பகுதிகள், கஜகஸ்தான், ஐரோப்பிய நாடுகள், வட ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் காணமுடியும். அதிகபட்சம் ரஷிய நாட்டின் மத்தியப் பகுதிகளில் மட்டும் சூரியனை 82 சதவீதம் சந்திரன் மறைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. உலகின் எந்த பகுதியிலும் முழு கிரகணம் நிகழாது.

  சூரிய கிரகணம் 2022 | என்ன செய்யலாம் மற்றும் என்ன செய்யக்கூடாது.!

  தமிழ் நாட்டில் சென்னையில் மாலை வானில் சூரியன் மறையும் போது 5.14 முதல் 5.44 மணி வரை மட்டுமே கிரகணம் தென்படும் என்றும்  அப்போது அதிகபட்சமாக 8 சதவீதம் மட்டுமே சூரியன் மறைக்கப்பட்டிருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

  இதேபோன்று, இந்தியாவின் மேற்குப்பகுதியில் உள்ள நகரங்களிலும் சூரியகிரகணம் தென்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இந்த கிரகணத்தை பொதுமக்கள் வெறும் கண்களால் பாா்க்கக்கூடாது. தொலைநோக்கி அல்லது படச்சுருள்களைக் கொண்டு பாா்க்கக்கூடாது. சூரிய வெளிச்சத்தைக் குறைக்கும் தன்மையுடைய சிறப்பு கண்ணாடிகள் அணிந்தும், சூரியனின் பிம்பத்தை ஒரு வெண்திரையில் விழச் செய்தும் பாா்க்கலாம். இதைத் தொடா்ந்து வரும் நவம்பா் 8-ஆம் தேதி முழு சந்திர கிரகணம் நிகழ உள்ளது. இது தமிழ் நாட்டில் பகுதி சந்திர கிரகணமாக சில நிமிடங்களே தென்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Published by:Lakshmanan G
  First published:

  Tags: Eclipse, Solar eclipse