பகுதிநேர ஆசிரியர்கள் ஊதிய உயர்வு கோரி மனு..!

அமைச்சர் செங்கோட்டையன்

  • News18
  • Last Updated :
  • Share this:
    பற்றாக்குறை ஊதியத்துடன் 10 ஆண்டுகளாகத் தவித்து வரும் பகுதிநேர ஆசிரியர்கள் ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுக்கு கருணை மனு அனுப்பி வருகின்றனர்.

    அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், தையல், இசை உள்ளிட்ட பாடங்களை கற்றுத் தருவதற்காக 2011-12-ஆம் கல்வியாண்டில் 16,549 சிறப்பாசிரியர்கள் பகுதிநேரமாக நியமிக்கப்பட்டனர். அதில் 12 ஆயிரம் பேர் மாதம் 7 ஆயிரத்து 700 ரூபாய் ஊதியத்தில் பணியாற்றி வருகின்றனர். எவ்வித பணப் பலன்களும் இல்லாமல் சொற்ப ஊதியத்தில் பணியாற்றி வரும் தங்களுக்கு பணி நிரந்தரம் செய்து, காலமுறை ஊதியம் வழங்கக் கோரி தமிழக அரசிடம் மனு அளித்துள்ளனர்.

    பகுதி நேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்வது குறித்து பரிசீலிப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு வெளியிட்டும், அவை நடைமுறைக்கு வராததால் தற்போது அரசுக்கு கருணை மனு அனுப்பி வருகின்றனர்.

    கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஜெயலலிதாவின் சமாதியில் கருணை மனு சமர்ப்பிக்கும் போராட்டம் நடத்தப்படும் எனக் கூறுகின்றனர்.

    பள்ளிக் கல்வித்துறையைத் தவிர பிற துறைகளில் தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிவோருக்கு பணிநிரந்தரம் சாத்தியமாகும் நிலையில், மாணவர்களுக்கு கல்வி போதிக்கும் ஆசிரியர்களுக்கும் அரசு கருணை காட்ட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    Also see:
    Published by:Rizwan
    First published: