Home /News /tamil-nadu /

கஜா புயல்: நாடாளுமன்ற நிதிக்குழுவிடம் ரூ.15,000 கோடி கோரிய தமிழக அரசு!

கஜா புயல்: நாடாளுமன்ற நிதிக்குழுவிடம் ரூ.15,000 கோடி கோரிய தமிழக அரசு!

தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்

தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்

மறுசீரமைப்பு பணிகளுக்கு 14,910 கோடியும், உடனடி நிவாரணத்திற்கு 1,431 கோடியும் ஒதுக்க வேண்டும் என தமிழக தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் வலியுறுத்தியுள்ளார்.

  • News18
  • Last Updated :
கஜா புயல் பாதிப்பில் இருந்து மீண்டு வர மறுசீரமைப்புப் பணிகளுக்கு 15,000 கோடி ரூபாய் தேவை என தமிழக தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் நாடாளுமன்ற நிதிக்குழுவினரிடம் வலியுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்ற நிதிக்குழுக் கூட்டம் அதன் தலைவரான காங்கிரஸ் எம்.பி. வீரப்ப மொய்லி தலைமையில் நடைபெற்று வருகிறது. மாநில பேரிடர் நிவாரண நிதியை பகிர்ந்தளிப்பு தொடர்பாக நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில், நிதிக்குழு உறுப்பினரான எம்.பி.க்கள் மன்மோகன் சிங், நவநீத கிருஷ்ணன், டி.கே.ரெங்கராஜன், ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர்.

டெல்லியில் நேற்று நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் தலைமையிலான குழுவினர் பவர் பாயிண்ட் முறையில், கஜா புயல் பாதிப்பு விரிவான அறிக்கையை தாக்கல் செய்தனர்.

அந்த அறிக்கையில், பாதிப்புகள் குறித்தும், தேவைப்படும் நிதி உதவி குறித்தும், அவர்கள் விளக்கம் அளித்தனர். அப்போது மறுசீரமைப்பு பணிகளுக்கு 14,910 கோடியும், உடனடி நிவாரணத்திற்கு 1,431 கோடியும் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அப்போது அதிமுக எம்.பி.க்கள் அர்ஜூனன் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.

Also see... கடற்படை வீரரின் புயல் எச்சரிக்கை - வைரலான ஆடியோ: வி.ஏ.ஓ விளக்கம்
Published by:Vaijayanthi S
First published:

Tags: Cyclone Gaja

அடுத்த செய்தி