மனைவிக்கு வேறொருவருடன் திருமணம் நடத்த முயன்ற பெற்றோர்: தடுத்து நிறுத்திய காதல் கணவர்

மனைவிக்கு வேறொருவருடன் திருமணம் நடத்த முயன்ற பெற்றோர்: தடுத்து நிறுத்திய காதல் கணவர்

காதல் தம்பதியினர்

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே செவிலியருக்கு நடைபெறவிருந்த திருமணத்தை காதல் கணவர் போலீசார் உதவியுடன் தடுத்து நிறுத்தினார்.

 • Share this:
  கன்னியாகுமரி மாவட்டம் வெட்டுவெண்ணி பகுதியை சேர்ந்த ஷாமிலி என்பவர், தன்னுடன் படித்த தருமபுரியை சேர்ந்த ராஜூ என்பவரை காதலித்து பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டார். இதற்கிடையில் அப்பெண்ணுக்கு, பெற்றோர் வேறொருவருடன் திருமணம் செய்து வைக்க எண்ணினர். அதன்படி நேற்று திருமணம் நடைபெறவிருந்தது.

  இதுகுறித்து தகவலறிந்து வந்த ராஜூ, தனக்கும் ஷாமிலிக்கும் ஏற்கெனவே திருமணம் நடைபெற்றது தொடர்பான ஆதாரங்களை போலீசாரிடம் காண்பித்தார். போலீசாரின் விசாரணையின்போது அப்பெண் ராஜூவுடன் செல்ல சம்மதித்தார்.

  மேலும் படிக்க...நீட் விவகாரம் - முதலமைச்சர், எதிர்கட்சி தலைவர் காரசார விவாதம்!  இதனையடுத்து திருமணத்தை தடுத்து நிறுத்திய போலீசார் தம்பதி இருவரையும் தருமபுரிக்கு அனுப்பி வைத்தனர்.
  Published by:Vaijayanthi S
  First published: