விழி பிதுங்கும் பெற்றேர்கள் - பள்ளிகள் திறப்புக்காக காத்திருப்பு

Youtube Video

பள்ளிகள், அங்கன்வாடிகள், காப்பகங்கள் மூடப்பட்டிருப்பதால் குழந்தைகளை பார்த்துக்கொள்ளும் பொறுப்பு பெற்றோருக்கு முழுமையாக வந்துள்ளது. இதனால் வேலையை விட்டு நிற்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

 • Share this:
  கொரோனா அச்சம் காரணமாக பள்ளிகள் , மழலையர் பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் 6 மாதங்களாக மூடப்பட்டிருப்பது, தந்தையும், தாயும் வேலைக்கு செல்லும் குடும்பங்களுக்கு பெரும்சுமையை கொடுத்துள்ளது. குழந்தைகளை பார்த்துக் கொள்ள வேண்டியுள்ளதால், கணவன், மனைவி இருவரில் யாருக்கு ஊதியம் குறைவோ அவர்கள் வேலையை விடும் சூழல் உள்ளது. குழந்தைகளை பார்த்துக் கொள்வதற்காக வேலையை விட்டுள்ள தந்தையர்கள், அவர்களின் சேட்டைகளை சமாளிக்க முடியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர்.

  பெரும்பான்மையான குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்பின்போது உடன் ஆள் இருக்க வேண்டியிருக்கிறது. எனவே, தனியார் நிறுவனங்களில் பணியாற்றிய பெண்கள் பலர், வேலையில் இருந்து விலகி உள்ளனர்.

  குழந்தைகள் முழுநேரமும் வீட்டில் இருப்பதால் செலவு அதிகரித்துள்ள அதே நேரத்தில், குடும்பத்தில் ஒருவரின் வருமானம் குறைந்திருப்பது வாழ்க்கை முறையையே மாற்றிப்போட்டுள்ளது.

  மேலும் படிக்க...உலக பிரியாணி தினத்தையொட்டி அதிரடி சலுகை - திருச்சியில் 10 பைசாவுக்கு பிரியாணி விற்பனை

   

  வழக்கமாக விடுமுறைகளை உற்சாகமாக கொண்டாடித்தீர்க்கும் குழந்தைகளே தற்போது எப்போது பள்ளி திறப்பர் என வினவ தொடங்கி விட்டனர். இதற்கான விடையை கொரோனா தொற்றும், அரசுகளுமே சொல்ல வேண்டும்.
  Published by:Vaijayanthi S
  First published: