நாயை போல் சிறுவனின் சுபாவங்கள் மாறியதால் பெற்றோர் அதிர்ச்சி - அலட்சியத்தால் ஏற்பட்ட மரணம்!

வெறிநாய்

நாக்கில் இருந்து எச்சில் ஊற்றியதாகவும், தண்ணீரை கண்டால் ஓடுவது உள்ளிட்ட சுபாவங்கள் நாயை போல் மாறியதையடுத்து பயந்து போன பெற்றோர் மோனீசை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 • Share this:
  பூந்தமல்லி அருகே வெறி நாய் கடித்ததில் ரேபிஸ் நோய் தாக்கி 7 வயது சிறுவன் பலியானான்.

  பூந்தமல்லி அடுத்த அகரமேல் பகுதியில் சாலையில் சுற்றித்திரிந்த வெறிநாய் அந்த வழியாக சென்ற சிறுவர்கள் சிலரை கடித்து குதறியது இதில் 5க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் சிலர் ரேபீஸ் நோய் தாக்காமல் இருப்பதற்காக தடுப்பூசிகளைச் எடுத்துக்கொண்டனர்.

  இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ராஜேஷ் இவரது மகன் மோனிஷ் 7 வயதான சிறுவனையும் அந்த வெறிநாய் கடித்து குதறியதில் முகம் உள்ளிட்ட இடங்களில் காயமடைந்தது இதையடுத்து அவரது பெற்றோர் சிறுவனுக்கு தடுப்பூசி ஏதும் போடாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.

  Also read: வாடகை செலுத்தியும் வங்கி லாக்கரை நீண்ட காலம் இயக்காமல் இருந்தால் என்ன ஆகும்? – ரிசர்வ் வங்கி புது விதிமுறைகள் அமல்!

  இந்த நிலையில் ஒரு மாதத்திற்கு பின்பு சிறுவனுக்கு திடீரென நாயை போன்று   நாக்கில் இருந்து எச்சில் ஊற்றியதாகவும், தண்ணீரை கண்டால் ஓடுவது உள்ளிட்ட சுபாவங்கள் நாயை போல் மாறியதையடுத்து பயந்து போன பெற்றோர் மோனீசை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த மோனிஷ் ரேபிஸ் நோய் தாக்கி இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.

  Also read:  94,000 கிமீ வேகத்தில் பூமியை நெருங்கிய ஆபத்தான சிறுகோள்!

  இந்த சம்பவத்தை அடுத்து சிறுவனின் பெற்றோர் மற்றும் சிறுவன் யாருடன் எல்லாம் பழகினார் என கணக்கெடுத்து அவர்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி போடுவதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் ஏனென்றால் சிறுவனின் எச்சில் பட்டால் அவர்களுக்கும் ரேபீஸ் நோய் பரவும் என்பதால் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  அகரமேல் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் வெறி பிடித்த நாய்கள் அதிக அளவில் சுற்றித் திரிவதால் அதனை பிடித்து மருத்துவம் பார்க்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வெறிநாய் கடித்த ஒரு மாதத்திற்கு பின்பு சிறுவன் ரேபிஸ் நோய் தாக்கி இறந்து போன சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது..

  சோமசுந்தரம் - செய்தியாளர் - பூந்தமல்லி
  Published by:Arun
  First published: