ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

கவனிக்காத பிள்ளைகளுக்கு சொத்துக்கள் எழுதி வைத்ததை ரத்து செய்ய பெற்றோருக்கு உரிமை உண்டு!! உயர்நீதிமன்றம் தீர்ப்பு

கவனிக்காத பிள்ளைகளுக்கு சொத்துக்கள் எழுதி வைத்ததை ரத்து செய்ய பெற்றோருக்கு உரிமை உண்டு!! உயர்நீதிமன்றம் தீர்ப்பு

பெற்றோர் - நீதிமன்றம்

பெற்றோர் - நீதிமன்றம்

தற்போது  சமூகம் இந்த மதிப்பின்  முக்கியத்துவத்தை வேகமாக இழந்து வருகிறது என்று வருத்தம் தெரிவித்த நீதிபதி

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Chennai |

  சமுதாயம் தனது பொதுப் பண்புகளை வேகமாக இழந்து வருவதாக வேதனை தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம்,  கவனிக்காத பிள்ளைகளுக்கு சொத்துக்கள் எழுதி வைத்ததை ரத்து செய்ய பெற்றோருக்கு உரிமை உள்ளதாக தீர்ப்பளித்துள்ளது.

  சென்னையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி, தனது சொத்துக்களை மூத்த மகன் பெயருக்கு எழுதி வைத்திருந்தனர். ஆனால், வயதான காலத்தில் தங்களை கவனிக்காமலும், மருத்துவ செலவுகளுக்கு உதவி செய்யாமலும் இருந்ததால், சொத்துக்கள் எழுதி வைத்ததை ரத்து செய்யக் கோரி வழக்கு பெற்றோர் தொடர்ந்தனர்.

  வழக்கை கீழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து பெற்றோர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆஷா விசாரித்தார்.

  ரயிலில் பட்டாசு எடுத்து செல்ல தடை! மீறினால் 3 ஆண்டுகள் சிறை !

  நகைகளை விற்றும், சேமிப்புகளை கரைத்தும், தங்கள் மருத்துவ செலவுகளை தாங்களே கவனிக்க வேண்டிய நிலைக்கு தள்ளிய மகன்களின் செயல்பாடு, இதயமற்றது என விமர்சித்த நீதிபதி, கடந்த 2007ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் நல பராமரிப்பு சட்டப்படி, கவனிக்காத குழந்தைகளுக்கு சொத்துக்கள் எழுதி வைத்ததை ரத்து செய்ய பெற்றோருக்கு உரிமை உள்ளதாக உத்தரவிட்டுள்ளார்.

  மேலும், 'தந்தை மகற்காற்றும் உதவி' என்ற திருக்குறளை மேற்கோள்காட்டிய நீதிபதி, சமுதாயத்தின் பொது பண்புகளை  இந்த குறள் எதிரொலிப்பதாகவும், தற்போது  சமூகம் இந்த மதிப்பின்  முக்கியத்துவத்தை வேகமாக இழந்து வருகிறது என்றும் வேதனை தெரிவித்துள்ளார்.

  Published by:Ilakkiya GP
  First published:

  Tags: Chennai High court, Property