பாலியல் குற்றச்சாட்டில் கைதான சிவசங்கர் பாபாவின் பள்ளியான கேளம்பாக்கம் அருகே உள்ள சுசில் ஹரி இன்டர்நேஷ்னல் பள்ளியில் படித்து வரும் மாணவர்களின் மாற்று சான்றிதழ் (டிசி) சான்றிதழ்களை 3ஆவது நாளாக பெற்றோர்கள் வாங்கி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கத்தில் சிவசங்கர் பாபவிற்கு சொந்தமான சுசில் ஹரி பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் சிவசங்கர் பாபா மீது மாமல்லபுரத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாலியல் குற்றச்சாட்டு புகார் அளித்ததை தொடர்ந்து போக்சோ சட்டத்தின் வழக்கு பதிவு செய்யப்பட்ட பின்னர் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றினர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்நிலையில், விசாரணைக்கு ஆஜராகுமாறு
சிவசங்கர் பாபாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. மாறாக, உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனிலுள்ள தனியார் மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாக, அவரது தரப்பில் கூறப்பட்டது.
இதற்கிடையில், வெளிமாநிலங்களுக்குச் சென்று விசாரணை மேற்கொள்ள வேண்டிய சூழல் இருப்பதால் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது. இதற்கிடையில்,
சிவசங்கர் பாபா வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருப்பதற்காக அவர் மீது லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.
எனினும், இன்று மருத்துவமனையில் சிவசங்கர் பாபா தப்பி ஓடினார். சிவசங்கர் பாபாவுக்கு சொந்தமாக உத்தரகாண்ட், டெல்லி ஆகிய பகுதிகளிலும் ஆசிரமங்கள் இருக்கின்றன. எனவே, அங்கு தப்பிச் சென்றாரா என்று சி.பி.சி.ஐ.டி போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்நிலையில், டெல்லி மாநில காவல்துறை உதவியுடன்
சிவசங்கர் பாபாவை சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் கைது செய்தனர். இன்று மாலை, அல்லது நாளை காலை சென்னை அழைத்து வரப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வழக்கு தொடர்பாக சென்னையில் வைத்து முழு விசாரணை நடைபெறும் என்று கூறப்படுகின்றது.
இந்நிலையில், பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிவசங்கர் பாபாவிற்கு சொந்தமான கேளம்பாக்கத்தை அடுத்த புதுபாக்கத்தில் உள்ள சுசில் ஹரி இன்டர்நேஷ்னல் பள்ளியில் படித்து வரும் ஏராளமான மாணவர்களின் டிசியை (மாற்று சான்றிதழ்) கேட்டு பெற்றோர்கள் தொடர்ந்து 3வது நாளாக பள்ளி முன்பு திரண்டு வருகின்றனர்.
Must Read : கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
பள்ளி நிர்வாகம், சான்றிதழ்களை வாங்குவதற்கு முன்னதாக படிவம் ஒன்றை கொடுத்து அதை பூர்த்தி செய்து கொடுத்த பின்பு ஒரு வாரத்திற்குள் டிசியை தருவதாக தெரிவித்து வருகிறது. அதேபோல் சான்றிதழ்களை வாங்கும் பெற்றோர்கள் இந்தாண்டு பிள்ளைகளுக்காக கட்டிய கல்வி கட்டணத்தை திரும்ப கொடுக்கும்படியும் பள்ளி நிர்வாகத்தை வலியுறுத்தி வருகின்றனர்.
மாணவர்களின் சான்றிதழ்களை பெற வரும் பெற்றோர்களை பள்ளி வளாகத்திற்குள் அனுமதிக்காமல் கேட்டை பூட்டி வெளியிலேயே நிற்கவைத்து கேட்டு உள்ளே நிர்வாகத்தினரும் கேட்டுக்கு வெளியே பெற்றோர்களும் நின்று பேசும் அவலம் இங்கே நிலவி வருகிறது.
செய்தியாளர் : ப.வினோத்கண்ணன்இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.