முகப்பு /செய்தி /தமிழ்நாடு / குழந்தைகளுக்கு கொரோனா... பெற்றோர் அச்சப்படத் தேவையில்லை - மருத்துவர்கள் தகவல்

குழந்தைகளுக்கு கொரோனா... பெற்றோர் அச்சப்படத் தேவையில்லை - மருத்துவர்கள் தகவல்

18 வயதுக்குட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி விரைவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

18 வயதுக்குட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி விரைவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

18 வயதுக்குட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி விரைவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

குழந்தைகள் மத்தியில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வந்தாலும், பெற்றோர் அச்சப்படத் தேவையில்லை என்று குழந்தைகளுக்கான கொரோனா சிகிச்சை மேலாண்மை குழு தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. பச்சிளம் குழந்தைகள் முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படாததால், அவர்கள் மத்தியில் தொற்று பரவல் படிப்படியாக அதிகரித்து வருகிறது.

கடந்த ஜனவரி மாதம் தமிழகத்தில் 20 ஆயிரத்து 326 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. அதில், 6 சதவீதம் பேர் அதாவது, 18 வயதுக்குட்பட்ட ஆயிரத்து 224 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதன்பிறகு, சிறுவர்கள் மத்தியில் பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து ஏப்ரல் மாதத்தில் 7.2 சதவீதமாக உயர்ந்தது.

மே மாதம் இரண்டாவது அலை உச்சத்தில் இருந்தபோது, தமிழகத்தில் 73 ஆயிரத்து 555 குழந்தைகள் பாதிக்கப்பட்டு, மொத்த பாதிப்பில் 7.7 சதவீதமாக இருந்தது. அதைத்தொடர்ந்து கொரோனா பாதிப்பு மாநில அளவில் குறைந்தாலும் கூட தொற்றால் பாதிக்கப்படும் குழந்தைகளின் சதவீதம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

ஜூன் மாதத்தில் கொரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகளின் சதவீதம் 8.8 விழுக்காடாக இருந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் 10.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்தாலும், அவர்களுக்கு கொரோனா பாதிப்பின் தீவிரம் குறைவாகவே இருப்பதாகவும், இறப்பு விகிதம் மிக மிகக் குறைவு என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

பெரும்பாலான குழந்தைகளுக்கு தொற்று பாதிப்பால் லேசான சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் மட்டுமே ஏற்படுவதாகவும், இதனால், பெற்றோர் பதட்டப்பட தேவையில்லை என்றும் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையின் முதல்வரும், குழந்தைகளுக்கான கொரோனா சிகிச்சை மேலாண்மை குழுவைச் சேர்ந்தவருமான தேரணி ராஜன் கூறுகிறார்.

இதேபோல, கொரோனா வைரஸ் பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை என்று குழந்தைகளுக்கான கொரோனா மேலாண்மை குழுவின் மற்றொரு உறுப்பினர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Must Read : சிறப்பு வழிகாட்டி குழு... கொரோனா 3ஆம் அலையை எதிர்கொள்ள தயார் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

இந்நிலையில், 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி விரைவில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் மேலும் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Child, CoronaVirus, Covid-19, News On Instagram