தர்மபுரி மாவட்டத்தில் திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்காத 16 வயது மகளுக்கு விஷம் கொடுத்து கொல்ல முயன்றதாக தாய், மற்றும் தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அருகே பாலகோடு பகுதியில் வசிக்கும் பெயர் குறிப்பிடப்படாத 16 வயது மாணவி அங்குள்ள பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். இவருடன் பிறந்த சகோதரிகள் 3 பேர்.
இந்நிலையில், மாணவியின் பெற்றோர் மூத்தவர் என்பதால் மாணவிக்கு திருமண ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால், மாணவி படிக்க விரும்புவதாகக் கூறி மாணவி திருமணத்துக்கு ஒத்துழைக்க மறுத்ததாக கூறப்படுகிறது.
தொடர்ந்து பெற்றோர் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ள அவரை மிரட்டியும், தாக்கியும் வற்புறுத்தி உள்ளனர். இதற்கு மாணவி உடன்படாத நிலையில், இன்று காலை மாணவிக்கு, பள்ளிக்கு கொடுத்தனுப்பிய மதிய உணவில் மர்மப் பொருள் எதையோ கலந்து கொடுத்துள்ளனர்.
இதைக் கண்ட, மாணவியின் தங்கை, ‘பெற்றோர் உணவில் விஷத்தை கலந்துள்ளனர். அதை சாப்பிட வேண்டாம்’ என பள்ளி செல்லும் வழியில் மாணவியை எச்சரிக்கை படுத்தியுள்ளார்.
Read Also... 10 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய பக்கத்துவீட்டு 12 வயது சிறுவன்!
இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, அந்த உணவை எடுத்துக் கொண்டு மகேந்திரமங்கலம் காவல் நிலையத்துக்கு சென்றுள்ளார். தொடர்ந்து காவல் நிலையத்தில் தனக்கு நடந்த சம்பவங்கள் குறித்து வாய்வழிப் புகாராகக் கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து மாணவியின் பெற்றோரிடம், குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்பினர் மற்றும் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் உணவில் விஷம் கலந்து கொடுத்தது உறுதியானது. எனவே, மாணவியின் தாய், தந்தை இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.
மேலும், மாணவியை குழந்தைகள் நலக் குழு பாதுகாப்பில் ஒப்படைக்கவும், மாணவியின் 3 தங்கைகள் பாதுகாப்பு தொடர்பாகவும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெற்ற மகளுக்கு, பெற்றோர்களே உணவில் விஷம் கலந்து கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Also See...
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Dharmapuri