மாணவர்களின் தற்கொலைகளுக்கு பெற்றோர்களே பொறுப்பு: பாஜக மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன்

மாணவர்களின் தற்கொலைகளுக்கு பெற்றோர்களே பொறுப்பு: பாஜக மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன்

பாஜக மாநில பொது செயலாளர் கரு.நாகராஜன்

மாணவர்களின் தற்கொலைகளுக்கு பெற்றோர்களே பொறுப்பு என பாஜக மாநில பொது செயலாளர் கரு.நாகராஜன் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதற்கு பெற்றோர்களே பொறுப்பு என்று பாஜக மாநில பொதுச்செயலாளர் கரு நாகராஜன் பேசியுள்ளார்.

    சிலந்தி, சண்ட, அருவா, மாஸ்க் படங்களின் இயக்குனரும் திரைப்பட தயாரிப்பாளருமான ஆதிராஜன் உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்டவர்கள், பாஜக மாநில பொது செயலாளர் கரு.நாகராஜன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் குட்டி பத்மினி முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.

    இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கரு.நாகராஜன், நீட் தேர்வு தொடர்பான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டு இருகிறது. மாணவர்கள் தற்கொலை என்பது வருத்தம் அளிக்கக்கூடியது. மாணவர்கள் தற்கொலைக்கு பெற்றோர்களே பொறுப்பு என தெரிவித்தார்.

    நீட் தேர்வு வந்த பிறகு இட ஒதுக்கீடு அடிப்படையில் பல முறை எழுத வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.நீட் தேர்வு பயத்தால் மாணவி இன்று தற்கொலை செய்து கொண்டது வருத்தமளிக்க கூடியது. தமிழக அரசியல் கட்சிகள் இதில் அரசியல் செய்கிறார்கள் என கூறிய அவர், அகில இந்திய அளவில் நீட் தேர்வு சிறப்பாக நடைபெறுவதாக தெரிவித்தார்.

    மேலும் படிக்க.,,,,நீட் தேர்வு அச்சத்தால் மதுரையில் உதவி ஆய்வாளர் மகள் தூக்கிட்டு தற்கொலை.. (வீடியோ)



    ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட போட்டி தேர்வுகளை மாணவர்கள் சந்தித்து வருகிறார்கள் அதில் ஒரு போட்டி தேர்வு தான் நீட் தேர்வு. நீட் தேர்வுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு தமிழக அரசு சட்டமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றினால் அதற்கு பாஜக வரவேற்பு தெரிவிக்கும் என தெரிவித்தார்.
    Published by:Vaijayanthi S
    First published: