முகப்பு /செய்தி /தமிழ்நாடு / தமிழ்நாட்டை உலுக்கிய மாணவி படுகொலை.. புற்றுநோயால் தாயாரும் உயிரிழப்பு.. நிர்கதியாய் தவிக்கும் 7 வயது சிறுமி..!

தமிழ்நாட்டை உலுக்கிய மாணவி படுகொலை.. புற்றுநோயால் தாயாரும் உயிரிழப்பு.. நிர்கதியாய் தவிக்கும் 7 வயது சிறுமி..!

சத்ய பிரியா -புற்றுநோயால் உயிரிழந்த அவரது தாய் ராமலட்சுமி

சத்ய பிரியா -புற்றுநோயால் உயிரிழந்த அவரது தாய் ராமலட்சுமி

Parangi Malai College Girl Murder | மகள், தந்தை, தாய் என மூன்று மாதங்களில் ஒரு குடும்பத்தில் அனைவரும் உயிரிழந்த நிலையில், சத்யாவின் 7 வயது தங்கை மட்டும் நிர்கதியாய் தவிக்கிறார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

சென்னையை அடுத்த  ஆலந்தூர் ராஜா தெரு போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தவர் மாணிக்கம் (47). இவரது  மனைவி ராம்லட்சுமி (43). இவர் ஆதம்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். இவர்களது மகள் சத்தியப்பிரியா (20) தி.நகரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் சத்யபிரியாவை ஆலந்தூர் ராஜா தெருவில் வசிக்கும் ஒய்வு பெற்ற போலீஸ் அதிகாரி தயாளன் என்பவரது மகன் சதீஷ் (30) என்பவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.  ஆனால் சதீஷின் காதலை சத்யா மறுத்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 13ந் தேதி சத்யா கல்லூரி செல்வதற்காக பரங்கிமலை ரயில் நிலையத்தில் தனது தோழியுடன் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த சதிஷ் சத்யாவை தண்டவாளத்தில் தள்ளிவிட்டார். இதில் சத்யா ரெயிலில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனையடுத்து சதீஷை கைது செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். மகள் உயிரிழந்த சம்பவத்தில் மனமுடைந்த சத்யபிரியாவின் தந்தை மாணிக்கம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில், ஆதம்பாக்கம் தலைமை காவலராக இருந்த தாயார் ராமலட்சுமி, தனது 7 வயது மகளுடன் வாழ்ந்து வந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், ஞாயிற்றுக்கிழமை காலை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சத்யாவின் தங்கையான 7 வயது சிறுமி, தனது குடும்பத்தினர் அனைவரையும் இழந்து நிற்கதியாய் தனித்து நிற்பது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

First published:

Tags: Chennai, Crime News