ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

பரந்தூர் விமான நிலைய திட்டத்தை மறு ஆய்வு செய்க - தமிழக அரசுக்கு பூவுலகின் நண்பர்கள் கோரிக்கை

பரந்தூர் விமான நிலைய திட்டத்தை மறு ஆய்வு செய்க - தமிழக அரசுக்கு பூவுலகின் நண்பர்கள் கோரிக்கை

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

வளர்ச்சித் திட்டங்களுக்கு விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதை அரசு தவிர்க்க வேண்டும் என்று நிலம் கையப்படுத்தும் சட்டத்தில் பிரிவு 10 கூறுகிறது- பூவுலகின் நண்பர்கள்

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பரந்தூர் விமான நிலைய திட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று, பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

  சென்னைக்கான இரண்டாவது விமான நிலையத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து பரந்தூரை சுற்றியுள்ள கிராம மக்கள் 50 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விமான நிலையம் அமைந்தால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

  இந்நிலையில், இத்திட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்னைக்கான இரண்டாவது விமான நிலையம் பரந்தூரில் அமைப்பதற்கான பணியில் தமிழ்நாடு அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில்,தனியாருக்கு தாரைவார்க்க உதவும் வகையில் மத்திய அரசின், "கிரீன்ஃபீல்டு விமான நிலைய" கொள்கையின் கீழ் பரந்தூர் விமான நிலையம் அறிவிக்கப்பட்டு உள்ளதாக கூறியுள்ளது.

  வளர்ச்சித் திட்டங்களுக்கு விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதை அரசு தவிர்க்க வேண்டும் என்று நிலம் கையப்படுத்தும் சட்டத்தில் பிரிவு 10 கூறும் நிலையில்,பரந்தூர் விமான நிலையத்திற்காக கையகப்படுத்தப்பட உள்ள 4 ஆயிரத்து 563 ஏக்கரில், 3 ஆயிரத்து 246 ஏக்கர் விவசாயம் நிலம் என சுட்டுக்காட்டப்பட்டு உள்ளது.

  இதனால், இத்திட்டத்திற்கு 13 கிராமங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.குறிப்பாக, 'ஏகனாபுரம்' கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளும், விவசாய நிலங்களும் கையகப்படுத்தப்பட்டு, அந்த கிராமம் இந்திய வரைபடத்தில் இருந்தே துடைத்து எறியப்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Read More : விடுதலையாகும் கைதிக்கு 5 ஏக்கர் நிலம், தொழில் உதவி... அசத்தும் புதுச்சேரி சிறைச்சாலை..

  மேலும், பரந்தூர் விமான நிலையம் வந்துவிட்டால் அதன் அருகே நிலங்களின் மதிப்பு பல மடங்கு அதிகரித்துவிடும் என்பதால்,அரசு கொடுக்கும் இழப்பீட்டு தொகை மூலம் எளிய மக்களால் அப்பகுதியில் நிலம் வாங்க முடியாது எனவும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

  எனவே, 13 கிராம மக்களின் நலன் கருதி பரந்தூர் விமான நிலைய திட்டத்தை, தமிழக அரசு மறுஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Airport, Chennai