பரமக்குடியில் தனியார் பேருந்து மோதி 14 வயது சிறுவன் உயிரிழப்பு..

முகிலன் (14)

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மணி நகர் பகுதியில் தனியார் பேருந்து மோதி 14 வயது சிறுவன் உயிரிழந்தார்.

  • Share this:
    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மணி நகர் பகுதியில் வசிக்கும் ரமேஷ் கண்ணன் பாக்கியலட்சுமி தம்பதியரின் மகன் முகிலன் (14). தனது சைக்கிளில் மணி நகரிலிருந்து தன் வீட்டிற்கு சாலையில் சென்று கொண்டிருந்தார். எதிர்ப்புறமாக மதுரையிலிருந்து பரமக்குடி நோக்கி அதிவேகமாக வந்த தனியார் பேருந்து திடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறி முகிலனின் சைக்கிளில் மோதியுள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே முகிலன் உயிரிழந்தார்.

    தகவலறிந்த பரமக்குடி துணை காவல் கண்காணிப்பாளர் வேல்முருகன், விபத்து குறித்து ஆய்வுசெய்தார். பிறகு, முகிலன் உடலை மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக அனுமதித்தனர்.



    நகர்ப் பகுதிகளில் தனியார் பேருந்துகள் அதிவேகமாகச் செல்வதால் அடிக்கடி இதுபோன்ற விபத்துகள் ஏற்படுகின்றன என்றும், இனிமேல் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    Published by:Rizwan
    First published: