பாரசிட்டமால் மாத்திரைக்கு மருத்துவரின் பரிந்துரை சீட்டு தேவையில்லை - தமிழக அரசு

மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமலும் பாரசிட்டமால் மாத்திரை வழங்கலாம் என்று தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்துள்ளது.

பாரசிட்டமால் மாத்திரைக்கு மருத்துவரின் பரிந்துரை சீட்டு தேவையில்லை - தமிழக அரசு
மாதிரி படம்
  • News18
  • Last Updated: July 14, 2020, 4:15 PM IST
  • Share this:
வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்கள் கொரோனா பரிசோதனையை தவிர்க்க, உடல் வெப்ப நிலையை குறைத்துக்காட்ட பாராசிட்டமால் மாத்திரையை பயன்படுத்துவதாக தகவல்கள் வெளியானது.

இதனை அடுத்து, பல மெடிக்கல் கடைகளில் பாரசிட்டமால் மாத்திரைகள், மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் விற்பனைக்கு இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. எனினும், அரசு இது தொடர்பாக உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை.

சாதாரண காய்ச்சல் உள்ளவர்கள் மெடிக்கல் கடைகளில் பாராசிட்டமால் மாத்திரை வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டதாக கூறி, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.


இந்த வழக்கில், இன்று பதிலளித்த அரசுத்தரப்பு வழக்கறிஞர், பாராசிட்டமால் மாத்திரையை மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமலும் மக்கள் கடைகளில் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
First published: July 14, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading