பாபநாசம் திமுக கூட்டணி வேட்பாளர் ஜவாஹிருல்லாவுக்கு கொரோனா உறுதி!

பாபநாசம் திமுக கூட்டணி வேட்பாளர் ஜவாஹிருல்லாவுக்கு கொரோனா உறுதி!

ஜவாஹிருல்லா

பாபநாசம் திமுக வேட்பாளர் ஜவாஹிருல்லாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • Share this:
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் ஒரு பக்கம் கொரோனா தொற்றும் வேகமெடுத்துக்கொண்டிருக்கிறது. தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கு இன்னும் 5 நாட்களே இருக்கும் நிலையில் திமுக, அதிமுக கூட்டணி மற்றும் ஏனைய கட்சிகளின் தலைவர்களும், வேட்பாளர்களும் இறுதிக் கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அடுத்தடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவது அரசியல் அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தொகுதியின் திமுக கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.

சமீபத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி சேலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜவாஹிருல்லா மேடையில் இருந்து இறங்கும் போது கால் இடறி கீழே விழுந்தார். இதற்காக 2 நாட்களாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றும் வரும் நிலையில் ஜவாஹிருல்லாவுக்கு கொரோனா தொற்றும் உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாகவே அவர் பிரச்சாரத்தில் கலந்துகொள்ளாமல் இருக்கும் நிலையில் தற்போது அவருக்கு கொரோனா தொற்றும் ஏற்பட்டிருப்பது திமுக கூட்டணி கட்சிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள்:

  • அம்பத்தூர் திமுக வேட்பாளர் ஜோசப் சாமுவேல்

  • திருச்சி துறையூர் தொகுதி அதிமுக வேட்பாளர் இந்திராகாந்தி

  • குறிஞ்சிப்பாடி தொகுதி திமுக வேட்பாளர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம்

  • சோழிங்கநல்லூர் தொகுதி திமுக வேட்பாளர் அரவிந்த் ரமேஷ்

  • விருகம்பாக்கம் தொகுதி தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதி

  • சென்னை அண்ணா நகர் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பொன்ராஜ்

  • வேளச்சேரி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் சந்தோஷ் பாபு

Published by:Arun
First published: