ஓ.பன்னீர் செல்வம் செல்லவிருந்த விமானத்தில் கோளாறு! 2 மணி நேரம் தாமதமான பயணம்

ஓ.பன்னீர் செல்வம் செல்லவிருந்த விமானத்தில் கோளாறு! 2 மணி நேரம் தாமதமான பயணம்
ஓ.பன்னீர் செல்வம்
  • News18
  • Last Updated: January 13, 2020, 9:55 PM IST
  • Share this:
மதுரைக்கு துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் சென்ற விமானத்தில் தொழில்நுட்ப கோளாறால்  2 மணி நேர தாமதத்திற்கு பிறகு புறப்பட்டு சென்றது. அதனால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை விமான நிலையத்தில் இருந்து மாலை 6.40 மணிக்கு தமிழக துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்லம் மதுரை செல்ல வந்தார். அப்போது அ.தி.மு.க நிர்வாகிகள் உற்சாகமாக வரவேற்றனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம்,’உலகம் முழுவதும் தமிழ் மக்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.

மதுரை செல்லும் விமானத்தில் துணை முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் உள்பட 149 பயணிகள் ஏறி அமர்ந்தனர். விமானத்தை நடைமேடையில் இருந்து ஒடுபாதைக்கு விமானி கொண்டு சென்றார்.


அப்போது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை விமானி கண்டுபிடித்தார். இது பற்றி விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் விமானம் மீண்டும் நடைமேடைக்கே கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறை சரி செய்ய தொழில்நுட்ப வல்லுனர்கள் ஈடுப்பட்டனர். விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டது. சுமார் 2 மணி நேர தாமதத்திற்கு பின் விமானம் மதுரைக்கு புறப்பட்டு சென்றது.

Also see:
First published: January 13, 2020, 9:55 PM IST
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading