எந்தவித பிரதி பலனையும் எதிர்பாராமல் உற்ற காலங்களில் உடனிருந்து உதவுபவர்களுக்கு நண்பர்கள் தின வாழ்த்துகள் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
உலகம் முழுவதும் நண்பர்கள் தினம் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் முதல் வார ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டுவருகிறது. அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, கணவன், மனைவி என ஏதேனும் உறவுகள் இல்லாமல் யாரேனும் வாழ்ந்து முடித்துவிட முடியும்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
ஆனால், நண்பர்கள் இல்லாமல் ஒருவர்கூட வாழ்த்திருக்க மாட்டார்கள் என்று உறுதியுடன் கூறி விட முடியும். அம்மா தினம், காதலர் தினம், பெண்கள் தினம் போன்றவை ஒரு குறிப்பிட்ட சாரருக்கானதாக மட்டுமே இருக்க முடியும். ஆனால், நண்பர்கள் தினம் என்பது எல்லாரையும் உள்ளடக்கிய ஒன்று என்பதுதான் அதனது சிறப்பு.
உலகம் முழுவதும் ஒவ்வொருவரும் அவர்களது நண்பர்கள் தின வாழ்த்துகளை பகிர்ந்துகொள்கின்றனர். இந்தநிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், நண்பர்கள் தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவருடைய ட்விட்டர் பதிவில்,
"உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு
எனும் வள்ளுவர் கூற்றின்படி, எவ்வித பிரதிபலனையும் எதிர்பாராமல் உற்ற காலங்களில் உடனிருந்து உதவும் உறவாகிய நட்பினை சிறப்பிக்கும் இத்தினத்தில், அனைவருக்கும் #FriendshipDay நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதில் மனம் மகிழ்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.
Also see:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.