Home /News /tamil-nadu /

அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு எதிரான ஓபிஎஸ் மனு இன்று விசாரணை

அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு எதிரான ஓபிஎஸ் மனு இன்று விசாரணை

அதிமுக

அதிமுக

தலைமை நீதிபதியிடம் முறையிட்டதற்கு, ஓபிஎஸ் தரப்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டது.  எனினும் புதிய நீதிபதியை நியமிக்கும் வகையில், தலைமை நீதிபதி முன் வழக்கு விவரங்களை சமர்ப்பிக்கும்படி பதிவுத்துறைக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி உத்தரவிட்டிருந்தார். 

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Chennai [Madras], India
    அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு, உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வருகிறது.

    சென்னையில் கடந்த மாதம் 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம், அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் தொடர்ந்த வழக்கு தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி விசாரிக்க கடந்த 4ம் தேதி பட்டியலிடப்பட்டது.

    அப்போது, வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என ஓபிஎஸ் மற்றும் வைரமுத்து தரப்பில் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரியிடம் மனு அளிக்கப்பட்டது.  வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்ற வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் விடுத்த கோரிக்கையை தலைமை நீதிபதி நிராகரித்துவிட்டதால், இந்த வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியே விசாரித்தார்.

    அப்போது, பன்னீர்செல்வத்தின் செயல் நீதித்துறையை களங்கப்படுத்துவது போல் இருப்பதாக நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி கூறினார். இதையடுத்து தலைமை நீதிபதியிடம் முறையிட்டதற்கு, ஓபிஎஸ் தரப்பில் வருத்தம் தெரிவிக்கப்பட்டது.  எனினும் புதிய நீதிபதியை நியமிக்கும் வகையில், தலைமை நீதிபதி முன் வழக்கு விவரங்களை சமர்ப்பிக்கும்படி பதிவுத்துறைக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி உத்தரவிட்டிருந்தார்.

    இதையும் படிங்க: மக்களை தேடி மருத்துவம் என்ற செயல்படாத திட்டத்தின் மூலம் உயிரோடு விளையாடுவதா? - எடப்பாடி பழனிசாமி கண்டனம்

    அவரது பரிந்துரையை ஏற்ற தலைமை நீதிபதி, அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகளை விசாரிக்க நீதிபதி ஜெயச்சந்திரனை நியமித்தார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது.
    Published by:Murugesh M
    First published:

    Tags: AIADMK, Chennai High court, O Panneerselvam, OPS - EPS

    அடுத்த செய்தி