வீட்டு வசதி திட்டத்துக்கு உலக வங்கி ரூ.5 ஆயிரம் கோடி நிதி அளிக்க ஒப்புதல் அளித்துள்ளதாக துணை முதல் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு துணைமுதல்வர் ஓ.பன்னீர் செல்வம் 10 நாள்கள் அரசுமுறைப் பயணமாக நவம்பர் 8-ம் தேதி அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அமெரிக்கா சென்ற அவர், தொழிலதிபர்கள், உலக வங்கி அதிகாரிகள் உள்ளிட்டவர்களைச் சந்தித்து பேசினார். 10 நாள்கள் சுற்றுப் பயணத்துக்குப் பிறகு சென்னைத் திரும்பிய அவருக்கு விமானநிலையத்தில் அ.தி.மு.க சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், கே.சி.பழனிசாமி, மதுசூதனன் உள்ளிட்டவர்கள் நேரில் சென்று வரவேற்றனர்.
செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ‘அமெரிக்கத் தொழிலதிபர்களுக்குத் தமிழகத்தில் முதலீடு செய்வதற்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. அந்த அழைப்பை ஏற்று முதலீடு செய்வதற்கு வருவதாக உறுதியளித்துள்ளனர். தமிழகத்தில் தொழில்தொடங்குவதற்குள்ள சாதகமான சூழல் குறித்து எடுத்துக் கூறினோம்.
700 கோடி ரூபாய்க்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. உலக வங்கியில் குடிநீர் திட்டம், போக்குவரத்து திட்டத்துக்கு நிதி உதவி கோரப்பட்டுள்ளது. தமிழ்நாடு வீட்டு வசதி திட்டத்துக்கு 5 ஆயிரம் கோடி ரூபாய் தருவதாக உலக வங்கி அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்’ என்று தெரிவித்தார்.
Also see:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.